செம த்ரில் டூர் வேணுமா: நெல்லியம்பதி போகலாம் வாங்க

பள்ளதாக்குகள் மற்றும் புல்மேடுகள் உள்ள பனிபடரும் பகுதி,இப்பகுதிக்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும்

கோவையில இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதி. காடுகளை சுற்றி பார்க்க தரமான செமையான இடம். நெல்லியம்பதியில் பல வியூ பாய்ண்டுகளும், அருவிகளும், அடர்ந்த வனப்பகுதிகளும்,தேயிலை,காப்பி,ஆரஞ்சு தோட்டங்களும் உள்ளன.

கோவையில் இருந்து வேலந்தாவளம் (தமிழக- கேரள சோதனைசாவடி சித்தூர், புதுநகரம் வழியாக கொல்லங்கோட்டில் இருந்து நென்மாரா. நென்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு மலைவழி சாலை வழியாக செல்ல வேண்டும்.நெல்லியம்பதி மலை சாலையில் கடைகள் இல்லை எனவே நென்மாராவில், தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வது நல்லது.

நென்மாரா டவுனை தாண்டி நெல்லியம்பதி சாலையில் போகும்போது மலையேறுவதற்கு முன்பாக “போத்துண்டி டேம்” உள்ளது. இந்த அணைக்கு மேலே சென்றால் அழகான நெல்லியம்பதி மலைகளும்,அருவிகளும் நன்றாக தெரியும்,அங்கே போட்டோ எடுப்பதற்கு நல்ல அருமையான இடம்.

சீதாரகுண்டு வியூ பாய்ண்ட் :

சீதாரகுண்டு வியூ பாய்ண்ட் பகுதி போப்ஸ் எஸ்டேட்(POABS ESTATE)பகுதியில் . இப்பகுதி முழுவதும் காப்பி,தேயிலை,ஆரஞ்ச்,ஏலக்காய்,மிளகு தோட்டங்களும்,அடர்ந்த காடுகளும்,அருவிகளும் உள்ளது..இலங்கையில் இருந்து சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு செல்லும் வழியில் இப்பகுதில் சில நாட்கள் தங்கி இருந்ததால் இப்பகுதிக்கு “சீதாரகுண்டு”என்று பெயர் வந்ததாம் …இந்த வியூ பாய்ண்ட்டிலிருநு்து பொள்ளாச்சி பகுதிகளை காண்லாம்…

மான்பாரா பீக் (அல்லது) ராஜாஸ் கிளிப் Mampara peak (or) raja’s cliff

காரசூரிக்கு அடுத்து இந்த மான்பாரா பீக் உள்ளது.. பள்ளதாக்குகள் மற்றும் புல்மேடுகள் உள்ள பனிபடரும் பகுதி,இப்பகுதிக்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும்…புகைப்படம் எடுக்க அருமையான இடம்..அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி,அதிகமாக மழை பொழியும் நேரங்களில் இப்பகுதிக்கு வனத்துறை அனுமதிக்க மாட்டார்கள்… செங்குத்தான கரடுமுரடான பாதைகளை கொண்டது..யானைகளை அடிக்கடி இப்பகுதியில் பார்க்கலாம்.

காரபாரா நீர்வீழ்ச்சி (karapara waterfalls)

நெல்லியம்பதியில் திரும்பிய பக்கமெல்லாம் நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் ..இந்த காரபாரா நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது..AVT estate ரோடு வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது,வாகனங்கள் நிறுத்திவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளின் வழியே நடந்து சென்றால் இந்த காரபாரா அருவியை அடையலாம்..இங்கு ஒரு தொங்குபாலம் உள்ளது,குளிப்பதற்க்கு நல்ல இடம்..இங்குள்ள அருவி அருகில் மணிபிளாண்ட் செடிகள் காணலாம்…கரடுமுரடான பாதையை கொண்டு இருப்பதால் நடந்து செல்ல வேண்டும்,அடர்ந்த காடுகளின் நடுவே அருவியில் குளிப்பது உற்சாகத்தை தரும்.

வரையாட்டுமலா (varaiyattumala)

வரையாட்டுமலாவில் வரையாடுகள் காணலாம்,யானை,சிறுத்தை,புலிகள்,கரடிகள், காட்டெருமைகள் வாழும் பகுதி,அடர்ந்த காடுகள் மிக்கபகுதி,இயற்கையை விரும்பும் நபர்களுக்கு சிறந்த பகுதி,ட்ரெக்கிங் செய்ய சிறந்த இடம்,வனவிலங்களை கண்டிப்பாக பார்க்கலாம்… குளிர் சுமார் 16°c முதல் 18°c வரை இருக்கும்,சில நேரங்களில் 16 க்கும் கீழ் குறையும்,அடிக்கடி மழை பெய்யும் பகுதி. கேரள அரசின் சார்பில் டிரெக்கிங் செல்பவர்களுக்கு கைக்காட்டி பகுதியில் விடுதி வசதியும் உள்ளது.சுற்றுலா வருபவர்களும் அங்கு தங்கலாம்,ஓணம் பண்டிகை சமயங்களில் இங்கு நல்ல கூட்டம் இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close