Nellikkai Tea, Nellikkai Benefits: உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளது. நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். சரி இது இருக்கட்டும் நெல்லிக்காயில் எப்படி டீ போடுவது என்பதை இங்கே பார்ப்போம்.
Advertisment
தேவையானப் பொருட்கள்
நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
Advertisment
Advertisements
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.
குறிப்பு - நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”