ஒரு முறை இப்படி நேந்திரம் பழம் வைத்து இந்த ஸ்வீட் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
5 டீஸ்பூன் நெய்
அரை கப் ரவை
5 ஸ்பூன் தேங்காய்
நேந்திரம் பழம் 3 நறுக்கியது
3 ஸ்பூன் சர்க்கரை
ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி
அரை கப் பால்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து ரவையை வறுத்துகொள்ளவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இனி கொஞ்சம் நெய் சேர்த்து தேங்காய் வறுக்க வேண்டும். தொடர்ந்து மீண்டும் நெய் சேர்த்து நேந்திரம் பழம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தற்போது இவை அனைத்தையும் சேர்த்து கொதிக்கும் பாலை ஊற்றி மூடி வைக்கவும். தொடர்ந்து இதை பிசைந்து பிடித்த வடிவில் மாற்றவும். தொடர்ந்து குறைந்த அளவு நெய் சேர்த்து இதை இரண்டு பக்கவும் பொறிக்க வேண்டும்.சுவையான நேந்திர பழ கட்லேட் ரெடி.