52 ஞாயிற்றுக் கிழமைகள், 43 விடுமுறை நாட்கள் என ஆண்டுக்கு 95 நாட்கள், அதாவது ஆண்டுக்கு மூன்று மாதம் விடுமுறை கொண்ட நாடு நேபாளம்.
இத்தனை நாட்கள் விடுமுறை தேவையா என யோசிக்க நேபாள பிரதமர் ஒரு கமிட்டியை போட்டார். கமிட்டி "விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும்" என தீர்மானம் போட்டு கொடுக்க, புதியதாக பங்குனி 1 அன்றையும் விடுமுறையாக அறிவித்தார் பிரதமர்.
இது மத்திய அரசின் விடுமுறை.
மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி. நேபாளம் ஒரு சிறிய நாடு. இதில் ஏழு மாநிலங்கள் இருக்கிறது. அவர்கள் நினைத்த போதெல்லாம் விடுமுறை விடுவார்கள்.
அப்படித்தான் ஒரு மாநில முதல்வர் சமீபத்தில் தன் மைத்துனர் இறந்ததுக்கு விடுமுறை அளித்தார்..
சரி..அப்படி என்ன 43 விடுமுறை நாட்கள் என கேட்கிறீர்களா?
இந்திரன் விழா
தமிழகத்தில் சங்ககாலத்தில் இருந்த இந்திரன் விழாவை இவர்கள் இன்னும் கொண்டாடிக் வருகிறார்கள்.
கை ஜாத்ரா விழா
மன்னர் பிரதாப மல்லர் மனைவியின் பெற்றோர் இறந்துவிட ராணி மிகுந்த துயரத்தில் இருந்தாராம். மனைவியின் சோகத்தை தாங்கமுடியாத மன்னர் மக்களிடம் "என் மனைவிக்கு ஆறுதல் கூற எல்லாரும் அவரவர் வீட்டு மாடுகளுக்கு காமெடியாக மேக்கப் போட்டு காட்மண்டு தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வாருங்கள், என கட்டளை போட்டாராம்.
மக்களும் மாடுகளுக்கு மாஸ்க், மேக்கப், கோமாளி அலங்காரம், உடைகள் எல்லாம் போட்டு தெருக்களில் கொண்டு வர அதைப் பார்த்த மகாராணி சோகத்தை மறந்து வாய்விட்டு சிரித்தாராம்.
அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் அதுவே வழக்கமாகி விட்டதாம்.
செய்தி: என்.எம்.இக்பால், கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“