ரொம்ப சுவையான கத்திரிக்காய் வறுவல். இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
1 டேபிள் ஸ்பூன் சோம்பு
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் மிளகு
கால் ஸ்பூன் வெந்தயம்
250 கிராம் கத்திரிக்காய்
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
5 பூண்டு நறுக்கியது
1 வெங்காயம் நறுக்கியது
கருவேப்பிலை 1 கொத்து
¼ ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு
1 ½ ஸ்பூன் மிளகாய் பொடி
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து வறுத்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். கடைசியாக அரைத்த மசாலா சேத்து வதக்கவும். சூப்பரான கத்திரிக்காய் வறுவல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“