இந்த தேங்காய் தோசை மற்ற தோசைகளை போல் இல்லாமல் மிகவும் மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருக்கும். மேலும், தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்ட சுவை இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
உளுத்தம் பருப்பு - ½ கப்
பச்சை அரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
புழுங்கல் அரிசி - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் தோசை செய்முறை:-முதலில் புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக கழுவி ஊறவைக்கவும். 2-3 மணி நேரம் கழித்து, இவை இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். தொடர்ந்து பச்சை அரிசி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் அவற்றையும் முன்னர் அரசி மாவு சேர்த்துள்ள அதே பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இவற்றை ஒரு கரண்டியால் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி சுமார் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தனியாக வைத்து விடவும். அதன்பின்னர், மாவை எடுத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது வழக்கம் போல் தோசை கல்லை சூடேற்றி மாவை ஊற்றவும்.பிறகு அதன் மேற்பரப்பில் நெய் ஊற்றி பிரட்டி எடுத்தால், சூப்பரான தேங்காய் தோசை ரெடி.