சுரைக்காய் வைத்து, இப்படி சைடிஷ் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
2 துண்டு பட்டை
3 கிராம்பு
1 ஏலக்காய்
முக்கால் டீஸ்பூன் சோம்பு
முக்கால் டீஸ்பூன் சீரகம்
கால் மூடி தேங்காய்
4 வத்தல்
அரை டீஸ்பூன் மிளகு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 ½ ஸ்பூன் எண்ணெய்
1 பெரிய வெங்காயம்
1 ஸ்பூன் இஞ்சி -பூண்டு விழுது
1 தக்காளி
உப்பு
350 கிராம் சுரைக்காய்
கொத்தமல்லி நறுக்கியது
செய்முறை : சுரைக்காய்யை சுத்தம் செய்து சின்னதாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில்,மல்லி, கீராம்பு,சீரகம், சோம்பு, பட்டை, மிளகு, வத்தல் ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதில் தேங்காய் சேர்த்து வறுக்கவும். நன்றாக வதங்கியதும் அதில், மஞ்சள் பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதில் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கிளரவும். 3 விசில் விட வேண்டும். தொடர்ந்து இதில் கொத்தமல்லி நறுக்கியதை சேர்த்து கிளரவும்.