அமெரிக்காவின் உட்டா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு புதிய வகை இறைச்சி உண்ணி டைனோசர்களின் புதைபடிவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அலோசொரஸ் ஜிம்மட்சனி எனப்படும் இந்த டைனோசரானது, மிகவும் பழமையானதாக, அதாவது 157-152 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, இறுதி ஜுராசிக் காலகட்டத்தில் இருந்த அலோசோரசின் தொல்லினங்கள் என்று கருதப்படுகிறது.
வடகிழக்கு உட்டாவில் உள்ள டைனோசர் தேசிய நினைவகத்தில் 1990-களின் முற்பகுதியில் தொல்லுயிரியலாளர்கள் முதன்முதலில் ஒரு ஜிம்மாட்சனியைக் கண்டுபிடித்தனர். அது, அதன் இனங்களில் நன்கறியப்பட்ட அலோசோரஸ் பிராபிலிசை முன் தேதியிட்டு குறிப்பிடுகிறது. தொல்லுயிரியலாளர் ஜூனியர் ஜேம்ஸ் எச். மேட்சனுக்கு மதிப்பளிப்பதற்காக, இந்த உயிரினவகைக்கு ‘ஜிம்மட்சனி’ எனப் பெயரிடப்பட்டது. அலோசோரஸ் என்ற உயிரினவகையின் இனப்பெயர் ‘வித்தியாசமான ஊர்வன’ எனும் பொருள்கொண்டதாகும்.
அலோசோரஸ் ஒரு இறைச்சியுண்ணி இருகாலி டைனோசர் மட்டுமல்ல, ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலகட்டங்களைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட தெரோபாட் டைனோசர்களில் ஒன்றும் ஆகும். ஒரு முழுமையான பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓட்டையும் இன்னொரு மண்டை ஓட்டையும் அதனுடன் சேர்ந்த எலும்புக்கூடு ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு, ஒரு ஜிம்மாட்சனியானது ஏறத்தாழ 26 - 29 அடி நீளமும் குறைந்தது 4 ஆயிரம் பவுண்டு எடையும் உள்ளதாக இருந்திருக்கும் என தொல்லுயிரியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கிளீவ்லேண்ட் லாயிட் டைனோசர் குவாரி (படம்: உட்டா பல்கலைக்கழகத்தில் ஜே வில்லார்ட் மேரியட் நூலகம்) இலிருந்து அலோசோரஸின் கலப்பு எலும்புக்கூட்டை பேலியோண்டாலஜிஸ்ட் ஜேம்ஸ் மேட்சன் ஜூனியர் சேகரிக்கிறார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அலோசொரஸ் வகை விலங்கினங்களின் நீண்ட கைகள், கால்கள் மற்றும் நகங்களை வைத்துப் பார்க்கையில், வட அமெரிக்காவில் இருந்தபோது அந்த வட்டாரத்தில் முக்கிய வேட்டையாளியாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. முதல் புதைபடிவங்களுடன் ஒப்பிடுகையில், ஏ ஜிம்மட்சனியானது ஒன்றன்மீதுஒன்றான பார்வைக் குறைவு உடையதாக, குறுகலான மண்டை ஓட்டைக் கொண்டிருந்தது. இது, இரண்டு உயிரினங்களுக்கும் வெவ்வேறு உணவுப்பழக்கம் இருந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்களைச் சிந்திக்கச்செய்தது.
வட அமெரிக்காவின் மோரிசன் உருவாக்கமானது, இரண்டு வகை அலோசோர்களை மட்டுமே வெளிப்படுத்தியது - ஏ ஃபிரேஜிலி மற்றும் ஏ ஜிம்மாட்சனி. இதில் ஏ பிரேஜிலி வகையினங்கள், ஜிம்மாட்சனிக்குப் பிறகு 5 மில்லியன் ஆண்டுகள் கழித்து உருவாகியதாகக் கருதப்படுகிறது.
" பாறைகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர ஆராய்ச்சியில், புதிய வகை டைனோசர் இனங்களை அங்கீகரிப்பது என்பது புதிய கண்டுபிடிப்புப் பணியில் மிகச் சிறப்பான ஓர் அனுபவம். டைனோசர் உலகத்தைப் பற்றி இன்னும் எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு ஜிம்மாட்சனி ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு” என்கிறார், இந்த ஆராய்ச்சி நூலின் இணையாசிரியர் டேனியல் சூரே.
"மேற்கு அமெரிக்கப் பகுதியின் ஜுராசிக் பாறைகளில் மென்மேலும் புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு பல அற்புதமான புதைபடிவங்கள் காத்திருக்கின்றன." என்றும் அவர் கூறுகிறார்.
தமிழில் - தமிழ்க்கனல் ஆர் ஆர்