Advertisment

"வயதானவர்களின் இதயம், சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பாராசிட்டமால்": ஆய்வு முடிவுகளில் தகவல்

பாராசிட்டமால் மாத்திரை வயதானவர்களிடையே இதயம், சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Pills

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு இரைப்பை, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது என புதியதாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: New study links paracetamol to side effects in digestive tract, heart, kidneys among older adults

 

Advertisment
Advertisement

பொதுவாகவே லேசான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். மேலும், வலி தொடர்பான பிரச்சனைகளுக்கும் பாராசிட்டமால் கொடுக்கப்படுகிறது.

எனினும், பாராசிட்டமால் மாத்திரைகளை நீண்ட காலமாக எடுத்துக் கொள்வதால், அவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். குறிப்பாக, குடல் தொடர்பான பிரச்சனைகளை அவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

அண்மையில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 24 சதவீதம் பெப்டிக் அல்சர் மற்றும் 36 சதவீதம் குடல் நோய் அபாயத்திற்கு பாராசிட்டமால் வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 19 சதவீதம் சிறுநீரக நோய் அபாயம், 9 சதவீதம் இதய நோய் அபாயம், 7 சதவீதம் உயர் இரத்த அழுத்த அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் தொடர்ச்சியாக பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும் வயதானவர்களுக்கு சிறுநீரகம், இருதய மற்றும் இரைப்பை குடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், தங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆய்வு செய்யப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆய்வின் போது 6 மாதங்களில் 2 முறைக்கும் அதிகமாக பாராசிட்டமால் பரிந்துரைக்கப்பட்ட 1.8 லட்சம் நபர்களின் மருத்துவ பதிவுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இவை, பாராசிட்டமால் தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்படாத அதே வயதுடைய 4.02 லட்சம் நபர்களின் உடல்நிலையுடன் ஒப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராசிட்டமால் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. இதில், சில ஆய்வு முடிவுகளில் பாராசிட்டமால் வலி நிவாரணத்தை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Research
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment