ஒரு முறை உருளைக்கிழங்கு குழம்பு, இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் சீரகம்
1 பட்டை
2 வெங்காயம் நறுக்கியது
உப்பு
¼ ஸ்பூன் மஞ்சள் பொடி
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மல்லித்தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
3 பச்சை மிளகாய்
1 தக்காளி நறுக்கியது
3 உருளைக்கிழங்கு அவித்தது
நறுக்கிய மல்லி இலை
செய்முறை
உருளைக்கிழங்கை நறுக்கி அவித்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், பட்டை, வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளவும். தொடர்ந்து இதில் மஞ்சள் பொடி , இஞ்சி பூண்டு- விழுது , கரம் மசாலா, மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தக்காளியை சேர்த்து கிளரவும். நன்றாக பச்சை வாசனை சென்றதும், உருளைக்கிழங்கை சேர்க்கவும். தொடர்ந்து 14 நிமிடங்கள் வேக வைக்கவும்.