மரவள்ளி கிழங்கு வைத்து செய்யப்படும் இந்த ஸ்வீட், உடலுக்கு நல்லது. இதில் சர்கக்ரை சேர்க்கவில்லை என்பதால் உடல் எடை அதிகரிக்காது.
தேவையான பொருட்கள்
அரை கப் வெல்லம்
கால் கப் தண்ணீர்
ஒரு மூடி தேங்காய்
கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
அரை கிலோ மரவள்ளி கிழங்கு
வாழை இலைகள்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து உருக்க வேண்டும். அதில் தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து மரவள்ளி கிழங்கு தோல் நீக்கி துருவிக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் பாலை பிழிந்து நீக்கிவிட்டு. மரவள்ளி கிழங்கு துருவியதை வாழை இலையில் வையுங்கள். தற்போது மேலாக வெல்ல பூரணத்தை உருண்டைகளாக வைக்கவும். தற்போது இலையை வட்டமாக மூடிக் கொள்ளவும். இது போன்று 15 வரை செய்த பிறகு இட்லி பாத்திரத்தில், வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“