இட்லி முதல் பூரி வரை எல்லா டிபனுக்கும் இந்த சட்னி அரைத்தால் போதும், செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் எண்ணெய்
1 ½ ஸ்பூன் உளுந்து
6 வத்தல்
சின்ன நெல்லிக்காய் அளவு புளி
2 பெரிய வெங்காயம்
கால் ஸ்பூன் பெருங்காயம்
கால் கைபிடி புதினா
3 ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, வத்தல், வெங்காயம் நறுக்கியது, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, புதினா, பெருங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். நன்றாக வதங்கியதும், அதை நம் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து இதில் எண்ணெய் கடுகு, கருவேப்பிலை தாளித்து கொடுக்கவும்.