சூப்பர் சிறு கிழங்கு வறுவல், இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிறு கிழங்கு – 300 கிராம்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு- உளுந்தம் பருப்பு
கருவேப்பிலை ஒரு கொத்து
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
செய்முறை: சிறு கிழங்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து சிறிய துண்டுகளாக அதை நறுக்க வேண்டும். நறுக்கிய சிறு கிழங்கை, மஞ்சள் பொடி சேர்த்து அவிக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கடலை பருப்பு சேர்க்கவும். ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். நன்றாக வறுபட்டதும், அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“