புதுவித பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பன்னீர் 200 கிராம்
உப்பு
மிளகு பொடி
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
1 பெரிய வெங்காயம்
10 முந்திரி பருப்பு
இஞ்சி துண்டுகள்
7 பல் பூண்டு
கொத்தமல்லி
2 ஸ்பூன் தயிர்
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி
அரை டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் வெண்ணை
1 டீஸ்பூன் சீரகம்
2 கிராம்பு
ஏலக்காய் 1
உப்பு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் சேர்த்து உப்பு, மிளகாய் பொடி, இஞ்சி -பூண்டு விழுதை சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். அதே பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து வதக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்து, தயிர் மிளகாய் தூள், கரம் மசாலா உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்த்து அதில், சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். தொடர்ந்து அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும் தொடர்ந்து அதில் வறுத்த பன்னீரை சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“