இந்த பொரித்த குழம்பு செய்வது மிகவும் எளிதாக இருக்கும். வழக்கமான குழம்பை விட இது மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய்- 6
துவரம் பருப்பு- 1 கப்
,மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
தேங்காய் துருவல்- ஒரு சிறிய கப்
கடுகு- ஒரு ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: முருங்கைக்காய் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் சதைப் பகுதியை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். துவரம் பருப்பை வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து மிளகு, காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுக்க வேண்டும். இதை மிக்ஸியில் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முருங்கைக்காய் சதைப் பகுதி, வேக வைத்த பருப்பு, உப்பு. தண்ணீர் சேர்த்து கிளர வேண்டும். இதில் அரைத்த விழுதை சேர்த்து கிளர வேண்டும். 12 நிமிசங்கள் அப்படியே மூடி போட்டுவிடவும். தொடர்ந்து எண்ணெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, குழம்பில் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“