இந்த சைடிஷ் சப்பாத்தி முதல் இட்லி வரை எல்லாதுக்கும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் துவரம் பருப்பு
அரை காப் பாசி பருப்பு
1 ½ கப் அளவு முட்டைக்கோஸ்
3 பச்சை மிளகாய்
5 சின்ன வெங்காயம்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் சாம்பார் பொடி
6 பூண்டு
1 பெரிய தக்காளி
1 கப் புளி கரைசல்
தாளிக்க : நல்லெண்ணை , கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, 4 வத்தல், பெருங்காய தூள், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் 10 நறுக்கியது
செய்முறை : ஒரு குக்கரில் துவரம் பருப்பு, பாசி பருப்பு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், சாம்பார் பொடி, பூண்டு, தக்காளி, புளி கரைசல் எல்லாம் சேர்த்து 5 விசில் விடவும். இது நன்றாக வெந்ததும். தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வத்தல், பெருங்காயத் தூள், கருவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதை குக்கரில் சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“