எளிமையாக செய்யக்கூடிய வெந்தயக் குழம்பு, இப்படி செய்து பாருங்க. ரெசிபி இதோ.
தேவையானப் பொருட்கள்
வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு
பூண்டு – 15 அல்லது 20 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.வெந்தயம் சிவந்து மணம் வந்த பின்பு அதில் புளியைக் கரைத்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.இப்போது வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். குழம்பு கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்.