இப்படி ஒரு முறை கொண்டைக்கடலை மசாலா செய்து பாருங்க. செம்ம சுவையான சைடிஷ்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
அவித்த உருளைக்கிழங்கு – 2
இஞ்சி- பூண்டு விழுது- 1 ஸ்பூன்
தேங்காய் பால் – அரை கப்
அவித்த வெள்ளை கொண்டைக்கடலை- 2 கப்
மல்லி பொடி- 2ஸ்பூன்
வத்தல் பொடி -1 ½ ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிதாக ஊற்றி அதில் மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ,கடுகு சேர்த்து பொறிந்ததும், அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து உருளைக்கிழங்கை சேர்க்கவும். தொடர்ந்து அவித்த கடலையை சேர்க்கவும். தொடர்ந்து வறுத்த மசாலா பொடியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். 15 நிமிடங்களில் மூடி போட்டு வேக வைக்கவும். தொடர்ந்து தேங்காய் பால் ஊற்றவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“