இப்படி ஒரு குழம்பை இதுக்கு முன்னாடி சாப்பிடுருக்கமாட்டீங்க. ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
தக்காளிக்காய்- ¼ கிலோ
நறுக்கிய தக்காளி – 2 கைப்பிடி
சின்ன வெங்காயம்- 2 கை பிடி
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
குழம்பு பொடி- 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை
செய்முறை: நறுக்கிய தக்காளியை தண்ணீர் விடாமல் சாறாக்கவும். தாளிப்பில் சின்ன வெங்காயம், தக்காளிக்காய் போட்டு வதக்கிய பின், தக்காளி சாறை ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பு பொடி, புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். சூப்பரான தக்காளி காய் காரக்குழம்பு ரெடி.