வெறும் தயிர், மசாலா பொருட்கள் வைத்து, இந்த மீல் மேக்கர் குழம்பு செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
1 கப் தயிர்
1 வெங்காயம்
2 ஸ்பூன் மல்லித் தூள்
1 ½ ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
பட்டை 2
கிராம்பு 1
ஏலக்காய் 2
பிரிஞ்சி இலை 2
சீரகம் அரை ஸ்பூன்
மீல்மேக்கர் 1 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தயிர், நறுக்கிய வெங்காயம், மல்லித் தூள், மிளகாய் பொடி , மஞ்சள் பொடி சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கீராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம், சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். இதில் உப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து குழம்பை கொதிக்க வைக்கவும். கடைசியாக வேக வைத்த மீல் மேக்கர் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“