News Reader Kanmani Beauty Secrets Skincare Tips Tamil : சின்னத்திரை கதாநாயகிகள், தொகுப்பாளிகள் வரிசையில் செய்தி வாசிப்பவர்களுக்கும் இப்பொழுதெல்லாம் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பிரியா பவானிஷங்கர், அனிதா சம்பத், சரண்யா வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் கண்மணி. மிகக் குறைந்த நாள்களிலேயே அதிகப்படியான ரசிகர்களால் இவருடைய கியூட் காணொளிகள் பகிரப்பட்டன. அவருடைய பியூட்டி சீக்ரெட்டுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"காலை எத்தனை மணிக்கு எழுந்தாலும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை மட்டும் தவறவிடமாட்டேன். அதனைத் தொடர்ந்து, வெந்நீர், எலுமிச்சை, தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினீகர் ஆகியவற்றை கலந்து குடிப்பேன். இது நிச்சயம் உங்கள் சருமத்தை பொலிவாக்கும். அதுமட்டுமின்றி இதனை விடாமல் குடித்து வந்தால் தொப்பை குறையும், உடல் ஃபிட்டாக இருக்கும். இதனை நான் இரண்டு வருடங்களாக பின்பற்றுகிறேன். நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
என்னுடைய டயட்டை பொறுத்தவரைக்கும், தினமும் கோதுமை பிரெட் மற்றும் முட்டைதான் என்னுடைய காலை உணவு. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பழ சாலட், ABC போன்ற ஜூஸ் வகைகளை உட்கொள்வேன். சத்தான ஜூஸ் எப்போதும் நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதேபோல ஆப்பிள், பீட்ருட், கேரட் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை அரைத்து, ஜூஸ் செய்து குடித்து உடலுக்கும் சருமத்திற்கும் அவ்வளவு நல்லது.
அதேபோல வெளியே சென்று வீடு திரும்பியதும், முன்பெல்லாம் மேக்-அப் அகற்றாமல் கூட தூங்க சென்றுவிடுவேன். ஆனால், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் அதிகம். எனவே, எப்போதும் முகத்தை முறையாக சுத்தம் செய்யாமல் உறங்கச் செல்லவே மாட்டேன். இதுபோன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil