Advertisment

'யார்கூடனு ஆரம்பிக்கிற கேள்விதான் கேட்பார்கள்' - கண்மணி சேகர் ஷேரிங்ஸ்!

News Reader Kanmani Sekar Lifestyle sharings Tamil News நம் முன்பு சிரித்துப்பேசும் அனைவரையும் நம்பிவிடக்கூடாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Reader Kanmani Sekar Lifestyle sharings Tamil News

News Reader Kanmani Sekar Lifestyle sharings Tamil News

News Reader Kanmani Sekar Lifestyle sharings Tamil News : முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு தற்போது செய்தி வாசிப்பாளர்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அனிதா, பிரியா பவானி ஷங்கர், சரண்யா துராடி என செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பயணிப்பவர்களின் பட்டியல்  நீண்டுகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்திய சென்சேஷன் கண்மணி சேகர், தான் கடந்து வந்த பாதைகளை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
publive-image

"எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்குப் பின்னால், நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிகப்படியான மனஉளைச்சலில் இருப்பவர்கள் அல்லது அதிகப்படியான கஷ்டத்தில் இருப்பவர்கள், அது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சிரித்து நடித்துக்கொண்டிருக்கலாம். அப்படிதான் நானும். ஆனால், நமக்கே தெரியாமல் அந்த புன்சிரிப்பு பலருக்கும் பாசிட்டிவிட்டியை கடத்திச் செல்லும். முகம் தெரியாதவர்களை பார்த்துக்கூடச் சிறிய புன்னகை செய்தால், நிச்சயம் அவர்களுக்கு பாசிட்டிவிட்டி கிடைக்கும்.

தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஆனால், நாம் செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமல், நம்மைத் தட்டிவிடவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம் இருக்கின்றனர். நம்முடைய வளர்ச்சி, நம்கூடவே இருக்கும் நண்பர்களுக்கே பிடிக்காது. அவர்களிடம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நம் முன்பு சிரித்துப்பேசும் அனைவரையும் நம்பிவிடக்கூடாது. நான் அப்படி நம்பி ஏமாந்திருக்கிறேன். அவர்கள்தான் நமக்குப் பின்னாடி நம்மைக் குத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

publive-image

என்கூடவே இருந்து, நான் படும் கஷ்டங்களைப் பார்த்த அவர்களே என் காலை வாரிவிடும்போது, வேறு யாரைத்தான் நம்புவது. அதிலும் மீடியாவில் இந்த பொறாமை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த மிகப் பெரிய தடையைத் தாண்டுவது நம் கையில் மட்டும்தான் உள்ளது. நம்முடைய வளர்ச்சியைப் பற்றி நாம் நினைத்தால் மட்டுமே நிறைவடையும். நான் சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன், நடந்திருக்கிறது.

அதேபோல அடுத்தவன் இடத்தைப் பிடிக்க என்றைக்குமே ஆசைப்படக்கூடாது. நமக்கான பாதையை உருவாக்கவேண்டும். எவ்வளவுதான் மற்றவர்களின் பாசிடிவிடி ஸ்பீச் உள்ளிட்டவற்றைக் கேட்டாலும், உங்களுடைய அனுபவம் மட்டுமே சிறந்த ஆசிரியர். எந்த அளவிற்கு பாசிட்டிவிட்டியை ஏற்றுக்கொள்கிறேனோ, அதே அளவிற்கு நெகட்டிவிட்டியையும் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டேன். இதற்கு முழுமையான காரணம் என் அனுபவம் மட்டுமே.

publive-image

வாழப்போவது ஒரு வாழ்க்கைதான். அதனை நமக்கு பிடித்தது போல வாழவேண்டும் என்று நினைக்கிறேன். 3 வருட அனுபவத்தில் 4 சேனல் மாறிவிட்டேன். அதற்குள் எப்படி இவ்வளவு வளர முடியும் என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். லக்கில் வந்துவிட்டதாகவும் அல்லது யார்கூடனு ஆரம்பிக்கிற கேள்வியை எளிதாகக் கேட்கின்றனர். இப்படி கேள்வி கேட்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள் என்று கேட்டிருப்பார்களா?"

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanmani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment