இப்படியும் ஆண்கள்..! தோல் உரித்து தொங்கவிட்ட ஊடகவியலாளர் பனிமலர்!

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்களின் பலமே அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல், அவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக செல்வதை ஊக்கமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

News Reader Panimalar slams and exposed harassers in public, News Reader Panimalar video, women safety, பாலியல் தொந்தரவு செய்தவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் பனிமலர், செய்தி வாசிப்பாளர் பனிமலர், social media, media person panimlar exposes harassers in public

கடை திறப்பு விழாவுக்கு வாங்க என்று அணுகி படுக்கைக்கு அழைத்த நபரை பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் பனிமலர் வாட்ஸ் அப் ஆதாரத்தை வெளியிட்டு அத்தகைய நபர்களுக்கு பதிலடி கொடுத்து தோலை உரித்து தொங்கவிட்டுள்ளார்.

இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், நள்ளிரவில் ஒரு பெண் தனியாக வெளியேகூட போய்விடலாம், ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு பெண் ஆன்லைனில் தொந்தரவு இல்லாமல் நிற்க முடியாது என்ற ஒரு சைபர் துன்புறுத்தல் சூழ்நிலை நிலவுகிறது. சைபர் மோசடிகளும், பெண்களுக்கு எதிராக சைபர் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்களின் பலமே அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல், அவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக செல்வதை ஊக்கமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

பாலியல் தொந்தரவு அளிக்கும் ஆண்களை அப்படியே விட்டுச்செல்லாமல், பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்களை ஊடகவியலாளர் பனிமலர் பொதுவெளியில் அப்பலப்படுத்தியிருக்கிறார்.

கடை திறப்பு விழாவுக்கு வாங்க என்று அணுகி படுக்கைக்கு அழைத்த நபர் யார் என்பதை ஊடகவியலாளர் பனிமலர் பொதுவெளியில் அம்பலப்படுத்தி வாட்ஸ் அப் ஆதாரத்தை வெளியிட்டு தோலை உரித்து தொங்கவிட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் செய்திவாசிப்பாளர் பனிமலர். ஊடகத்துறையில் பணிபுரியும் இவர் சன் தொலைக்காட்சியில் தனது ஊடகவியலாளர் பணியைத் தொடங்கினார். இதையடுத்து, இவர் பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல செய்தித் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் சர்ச் என பல சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

இந்த நிலையில் பனிமலர் தன்னிடம் தரைகுறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை அம்பலப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், கடை திறப்பிற்கு அழைத்து ஒரு நாள் இரவு தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் பணிமலருக்கு மெசேஜ் செய்துள்ளார். வாட்ஸ்அப் ஆதாரத்தை வெளியிட்ட பனிமலர், கடை திறப்புக்கு கேட்டுட்டு, ஒரு நைட்டுக்கு இவன் எவ்ளோ வேணாலும் தர்றானாம். பெண் தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும்போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் அநாவசியமாக யாரையும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன். அப்பவும் இது நடந்துட்டேதான் இருக்கு. இன்னைக்கு ஒரு அக்காட்ட பேசும்போது லைவ் முடுஞ்சதும் வீடியோ கால் வந்துச்சுமா நிர்வாணமா நிக்குறான்னு லட்ரலி அழறாங்க. எவ்ளோ கேவலம் இதெல்லாம். பெண்கள் வேலை செய்யலனா செய்யலனு சொல்றோம். வேலை செய்யும்போது இப்படி தொந்தரவு செஞ்சா அவுங்களும் என்னதான் செய்வாங்க. அதிலும் இந்திகாரனுங்க நிறைய பேர் இப்படி திரியுறானுக. ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்படி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும்.

பெண்கள் இதுக்கெல்லாம் பயந்து வேலை செய்யாம இருக்க முடியாது. இவனுங்களை தைரியமா டீல் பண்ணுங்க. அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாங்கோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக. முதலில் இது போன்ற பொறுக்கித்தனமாக இருக்கும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் புடிக்காது. பெண்களை பாதுகாக்கும் ஆண்களையே பெண்களுக்கு புடிக்கும்.

இது போன்ற பொறுக்கி ஆண்களை பெண்கள் ஒரு மனிதனாகவே மதிக்க வேண்டாம். ஒரு புழு பூச்சியாக்கூட மதிக்காதீர்கள்.” என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஊடகவியலாளர் பனிமலர், சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: News reader panimalar slams and exposed harassers in public

Next Story
சைடிஷ் தேவையில்லை: வீட்டில் பூரி இப்படி செய்து பாருங்க!aloo Poori recipe in tamil: aloo poori making in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com