1989-ல தூர்தர்ஷன்ல செய்தி வாசிப்பாளரா ஆரம்பிச்சேன்: நியூஸ் ரீடர் ரத்னா மலரும் நினைவுகள்

நான் 1989-ல தூர்தர்ஷன்லதான் செய்தி வாசிப்பாளரா என்னுடைய பணியை ஆரம்பிச்சேன். அப்புறம் சன் டி.வி.க்கு மாறி, அங்க நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தேன். அதுக்கப்புறம் அங்கயும் மறுபடியும் செய்தி வாசிக்க அரம்பிச்சேன்

நான் 1989-ல தூர்தர்ஷன்லதான் செய்தி வாசிப்பாளரா என்னுடைய பணியை ஆரம்பிச்சேன். அப்புறம் சன் டி.வி.க்கு மாறி, அங்க நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தேன். அதுக்கப்புறம் அங்கயும் மறுபடியும் செய்தி வாசிக்க அரம்பிச்சேன்

author-image
WebDesk
New Update
News Reader Rathna

News Reader Rathna

ஊடகத்துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனித்துவமான அடையாளத்துடன் பயணிப்பவர் செய்தி வாசிப்பாளர் ரத்னா. அவருடைய கம்பீரமான குரலும், தெளிவான உச்சரிப்பும் பல தலைமுறைகளுக்கு செய்தி கேட்ட அனுபவத்தை மறக்க முடியாததாக்கியுள்ளது.

Advertisment

ரத்னாவின் கணவர் எப்போதும் அவரது பயணத்திற்குப் பக்கபலமாக இருந்து வருகிறார். "என் தொழில் வாழ்க்கையில் அவர் ஒருபோதும் தலையிட்டதில்லை. நான் எப்போதுமே சுதந்திரமாக செயல்பட அவர் உறுதுணையாக இருந்தார்" என்று ரத்னா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். இந்த பரஸ்பர புரிதலே அவர்களின் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

சமீபத்தில் கலட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரத்னா தன்னுடைய செய்தி வாசிப்பு பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

Advertisment
Advertisements

”நான் 1989-ல தூர்தர்ஷன்லதான் செய்தி வாசிப்பாளரா என்னுடைய பணியை ஆரம்பிச்சேன். அப்புறம் சன் டி.வி.க்கு மாறி, அங்க நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தேன். அதுக்கப்புறம் அங்கயும் மறுபடியும் செய்தி வாசிக்க அரம்பிச்சேன்.

இந்த வருஷத்தோட, என் பணி வாழ்க்கையில 36 வருஷங்கள் முடிஞ்சு, இப்போ 37-வது வருஷத்துல அடியெடுத்து வெச்சிருக்கேன். இத்தனை வருஷம் தொடர்ந்து செய்தி வாசிக்க முடிஞ்சதுக்கு ஒரே காரணம், அது இறைவனின் அருள் மட்டும்தான். என்னோட பக்கம் இருந்து எதுவுமே இல்லை. இது எல்லாமே கடவுளோட ஆசீர்வாதம்தான்.

சாதாரணமாக, ஒரு 5 வருஷம், 10 வருஷம்னு படிக்கலாம். எவ்ளோ வருஷம் படிக்க முடியும். என்னோட தொழில் வாழ்க்கையில என்னோட கணவர் தலையிட்டதே கிடையாது. நான் எப்போதுமே சுதந்திரமா செயல்பட்டேன்” என்று ரத்னா அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசினார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: