நைஜீரியா நாட்டில் ஓயோ மாநிலத்தில் உள்ள ஒக்போமோசோ அரண்மனையில் வசித்து வந்த 'அலக்பா' என்ற ஆமையின் மரண செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .
இந்த ஆமைக்கு நிரைய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஆமையின் வயது 344, ஒரு மாதத்திற்க்கு இருமுறை மட்டும் உணவருந்தும் பழக்கம், மனித நோய்களை குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டது என்ற செய்தியால் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்தவையாகவே இருந்து வந்தது இந்த அலக்பா ஆமை . 1770 முதல் 1797 வரை ஆட்சி செய்த இசான் ஒகுமாய்டே என்பவரால் மதிப்பிற்குரிய இந்த அலக்பா ஆமை அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது என்ற வரலாறும் உண்டு.
இருந்தாலும், வல்லுநர்கள் அலக்பாவின் ஆயுட்காலத்தை குறித்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர் . ஆமைகள், நூறு ஆண்டு வாழ்வது சிறப்பானது, சில இராட்சத ஆமைகள் 200 வரை வாழக்கூடியவை, ஆனால் புகைப்படத்தில் காட்டப்படும் அலக்பாவின் ஆயுட்காலம் மிகவும் அரிதான விதிவிலக்கு, ஏன்.... சாத்தியமற்றது, என்றும் சொல்லியுள்ளார்.
செயின்ட் ஹெலினாவில் வசிக்கும் ஜொனாதன் என்ற 187 வயது ராட்சத ஆமை உலகின் மிகப் பழமையான ஆமையாக அறிவியில் முறையில் நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.