இறுதி சடங்கில் தந்தைக்கு மகன் செய்த செயல்... அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்!

சாவப்பெட்டிற்கு பதில் புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதில் அவரின் உடலை வைத்து புதைப்பது தான்.

நைஜீரியாவில் தனது தந்தையின் உடலை பி.எம்.டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்து, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகனின் செயல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தாய் – தந்தையின் மீது அலாதியான பாசத்தை கொண்டிருப்பவர்களால் அவர்களின் பிரிவை எப்போதும் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போல் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் அவர்களால் மறக்க முடியாது. அப்படி தான் நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்ற இளைஞர் தனது தந்தைக்கு இறக்கும் தருவாயில் ஒரு சத்தியத்தை செய்துக் கொடுத்துள்ளார்.

அந்த சத்தியத்தை அவர் மறைந்த பின்பு, மறவாமல் நிறைவேற்றியுள்ளார். அஷுபுய்க் செய்து கொடுத்த சத்தியம் என்னவென்றால், அவரின் தந்தையை சாவப்பெட்டிற்கு பதில் புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதில் அவரின் உடலை வைத்து புதைப்பது தான்.

அந்த சத்தியத்தை காப்பாற்றும் விதமாக, புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையின் உடலை வைத்து மண்ணில் புதைத்துள்ளார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அஷுபுய்க்கின் செயலை கேலி செய்துள்ளன.

தந்தை மீது பாசம் இருக்க வேண்டும் தான். ஆனால் இப்படி புனிதமாக செய்யக் கூடிய இறுதி அஞ்சலியை காரில் வைத்து செய்திருப்பது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close