இரவு தூங்குவதற்கானது. ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு தேவையான அருமருந்து. மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவிலும் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இரவில் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, பகலில் அவர்கள் தூங்கும் சூழ்நிலை உருவாகிறது. இரவில் விழித்திருப்பதும், பகலில் தூங்குவதும் இயற்கையான உடல் இயக்க நிலையை தடம்புரளச்செய்து நோய்களை உருவாக்குகிறது. அவர்களுக்கு தூக்கத்தில் ஏற்படும் பாதிப்புமட்டுமல்ல, வேலைகளைத் திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாத நெருக்கடியும் உருவாகும்.
இரவுப் பணிக்காக முரண்பாடான நேரங்களில் உணவு சாப்பிடுவது, வெகு நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது போன்றவைகளும் உடலுக்கு கூடுதல் பிரச்சினைகளை தரும். இவர்களுக்கு மற்றவர்களைவிட மனஅழுத்தமும் அதிகரிக்கும். இதை சரி செய்யவே ஆயுர்வேத முறை உங்களுக்கு சில ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பற்றி கூறுகிறது. சிட்ரிக் அமிலம் இருக்கக் கூடிய லெமன், ஆரஞ்ச் போன்ற ஜூஸ் வகைகளைத் தவிர்த்து, பழச்சாறு வகைகளை எடுக்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஷர்மிகா.
ஏ.பி.சி எனும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றின் கலவை, வெள்ள பூசணி ஜூஸ், சுரக்காய் ஜூஸ், வாழைத் தண்டு ஜூஸ், முலாம்பழம் (கிர்ணி), தர்பூசணி, ஆப்பிள் ஜூஸ், மாதுளை ஜூஸ், ஆலோவேரா, கிவி ஜூஸ், நுங்கு மற்றும் சர்பத், பதனீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.