New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-47.jpg)
nila serial pavithra sun tv nila serial today
மாடலிங் வாழ்க்கையை தொடருவதற்காக, அந்த வேலையை விட்டு விட்டாராம்.
nila serial pavithra sun tv nila serial today
nila serial pavithra sun tv nila serial today : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நிலா’ சீரியலில் நிலாவாக நடித்து வருபவர் பவித்ரா. 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர், தற்போது நிலா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியல் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினி, மாடல், விஜே என பன்முகங்கள் கொண்டவர்.
இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதற்கு பின் பிரபலங்கள் பல பேர் கலந்துக் கொண்ட ’சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியில் பவித்தராவும் கலந்து கொண்டார். இதனால் சொப்பன சுந்தரி பவித்ரா என்று ரசிகர்கள் மத்தியில் செல்லப் பெயரையும் பெற்றுள்ளார். அடிப்படையில் மாடலிங்கில் ஆர்வம் மிகுந்த பவித்ரா, விஜேவாக தான் முதலில் மீடியாவில் அறிமுகமானார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த சர்கார் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதோடு ஆளுக்கு பாதி 50/50 என்ற படத்திலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த பவித்ரா, சன் குழு சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக சன் சிங்கர் நிகழ்ச்சியை சொல்லலாம். எம்.பி.ஏ படித்துள்ள பவித்ரா, பின்னர் ஒரு கார்ப்பரேட் துறையில் பணியாற்றினார். ஆனால் தனது மாடலிங் வாழ்க்கையை தொடருவதற்காக, அந்த வேலையை விட்டு விட்டாராம்.
தற்போது நிலா சீரியலில் ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாகவும், பின்னர் வில்லி நீலாம்பரிக்கு டஃப் கொடுக்கும் தைரியசாலி பெண்ணாகவும் நடித்து வருகிறார். சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிஸோடிலும் பவித்ரா அணிந்து வரும் உடைகள் மிக அருமையாக இருப்பதாக பல பெண்கள் ஆச்சர்யப்பட்டனர். நிறைய மாடலிங் ஷோக்களில் பங்கு பெற்று இருக்கும் பவித்ரா தனக்கென இருக்கும் உடை அமைப்பாளர் வைத்துக் கொள்ளாமல், சேனல் தரும் உடைகளை அணிந்து வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.