நினைத்தாலே இனிக்கும் சீரியல், ஜீ தமிழ் டிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஆனந்த் செல்வன், ஸ்வாதி, நேகா ஜா, ஜனனே பிரபு, மிதுன் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
என். பிரியன் இந்த சீரியலை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, 1200 எபிசோட்களை கடந்த பிரபல ஹிட் சீரியலான யாரடி நீ மோகினியை இயக்கியவர்.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வரும் பொம்மி (சுவாதி) மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் இளம்பெண். அதிலும் தென்னிந்திய பாரம்பரிய இனிப்பு வகையான ‘அதிரசம்’ தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவள்.
ஒரு பெரிய ஸ்வீட் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பது பொம்மி தந்தையின் கனவு. அதை நிஜமாக்க பொம்மி கடினமாக உழைக்கிறாள். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கையில் பொம்மி, தன்னுடன் முரண்பட்ட ஒரு பணக்கார தொழிலதிபரான சித்தார்த்தை சந்திக்கிறாள். எதிர்பாராதவிதமாக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இனி பொம்மி தன் கனவுகளை நிஜமாக்க என்ன செய்ய போகிறாள் என்பது தான் சீரியலின் கரு.
இதில் பொம்மியாக,நடிக்கும் ஸ்வாதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில், 13 மே 1995 இல் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை செயின்ட் கிளேர் பள்ளியிலும், சிஸ்டர் நிவேதிதா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பெங்களூரில் உள்ள மஹாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
ஸ்வாதி ஏற்கெனவே ’ஒண்டு கண்டேய கதே, துரோணா, ஃபார்ச்சூனர்’ ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் இப்போது தமிழ் சீரியல் உலகில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த சீரியல், வெளியான அறிமுகமான இரண்டாவது வாரத்திலேயே, மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடராக மாறி, TRP தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
இதில் பொம்மியாக நடிக்கும் ஸ்வாதிக்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது அழகான முகமும், அப்பாவித்தனமான நடிப்பும் அவருக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது,
இப்போது ஸ்வாதி, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் எட்டு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “