/indian-express-tamil/media/media_files/Ps5OSAztCki2u17XnIJN.jpg)
நிர்மலா சீதாராமன் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் ராமர் நீலம், க்ரீம் கலந்த டஸ்ஸார் புடவடையை அணிந்திருந்தார்.
நிர்மலா சீதாராமன் எல்லா வருடம் பட்ஜெட்டின்போது, இந்திய நெசவாளர்களால் நெய்யப்பட்ட புடவைகளைத்தான் அவர் அதிகமாக பயன்படுத்துகிறார்.
நேற்று அவர் ராமர் நீலத்தில் அணிந்திருந்த புடவடையில் காந்தா பாணியிலான வேலைபாடுகள் இருந்தது. மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசத்தில் இந்த புடவைகள் பாரம்பரியமாக உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் குறிப்பாக இந்த தொழிலில் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களை முன்னிலைப்படுத்தும் விதமாக அவர் அந்த சேலையை அணிந்திருந்தார்.
கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு பட்ஜெட்டில்: அர்ப்பணிப்பு, துணிச்சலைக் குறிக்கும் வகையில் கருப்பு மற்றும் தங்க நிற பாடர் கொண்ட வெர்மில்லியன் சிவப்பு புடவையை அணிந்திருந்தார்.
கர்நாடகாவின் இல்கல் பகுதியில் கிடைக்கு, நவலகுண்டா எம்பிராய்டரி உள்ள சேலையை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாரமனுக்கு பரிசளித்தார்.
2022ம் ஆண்டு பட்ஜெட்டில்: இதில் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் வகையில் பிரவும் நிற போம்காய் புடவையை அணிந்திருந்தார். இது ஒடிசாவின், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த போம்காய் கிராமத்தின் கைத்தறி புடவையாகும்.
2021ம் ஆண்டு பட்ஜெட்: தெலங்கானாவின் பட்டு நகரத்தின் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் வெள்ளை நிற டிசைன் மற்றும் தங்க பாடர் கொண்ட மிருதுவான மற்றும் எளிமையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.
2020 பட்ஜெட்: இதில் மஞ்சள் நிற பட்டுப் புடவையில், தங்கச் செயின், கைக்கு வலையல்கள் என்று எளிமையாக வருகை தந்தார்.
2019 பட்ஜெட்: சிவப்பு நிற மங்களகிரி புடவையில் காட்சியளித்தார். இந்த புடவை ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் நெசவு செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.