/indian-express-tamil/media/media_files/PNhxdb5s4f8VQtB3lD6v.jpg)
நீட்டா அம்பானி - அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட்டின் (image Screen Shot x/PTI)
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் ஜாம் நகரில் ப்ரீ வெட்டிங் விழா கோலாகலமாக நடைபெறும் நிலையில், ஆனந்த் அம்பானியின் தாயார் நீட்டா அம்பானி இந்த திருமணத்தில் தனக்கு 2 ஆசைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது ப்ரீ வெட்டிங் வெள்ளிக்கிழமை (01.03.2024) முதல் வரும் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சென்ட்டின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்காக ஜாம் நகரில், 1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என கோலகாலமாக நடைபெற்று வருகிறது.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்தில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முகேஷ் அம்பானியின் அழைப்பை ஏற்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங், திரைப்பட இயக்குநர் அட்லீ, போனி கபூர், கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட், சாம் கரண், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வருகை புரிந்துள்ளனர். அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்காக பிரபலங்கள் பலரும் வந்து குவிந்து வருவதால், ஜாம் நகர் கலைகட்டி வருகிறது.
VIDEO | Nita Ambani, founder and chairperson of #RelianceFoundation, speaks on the pre-wedding function of her son Anant Ambani with Radhika Merchant at Jamnagar, #Gujarat. pic.twitter.com/0N3d1V0PoH
— Press Trust of India (@PTI_News) March 1, 2024
முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் பவுன்டேசன் நிறுவன தலைவருமான நீட்டா அம்பானி, அவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த திருமணத்தில் தனக்கு 2 ஆசைகள் உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அவரது தாய், நீட்டா அம்பானி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “எனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு ஆசைகள் மட்டுமே உள்ளன. முதலாவது நமது பாரம்பரியத்தை கொண்டாட வேண்டும், மற்றொன்று நமது கலை மற்றும் பண்பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.