திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நன்கொடையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவுக்கு திருமலையில் குவியும் சாமானிய பக்தர்களுக்கு அதிக தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன், பிரம்மோற்சவ விழா நாட்களில் நன்கொடையாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது என்று திருமலை திருப்பது தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 4-ம் தேதி மற்றும் அக்டோபர் 12-ம் தேதி மட்டும் நன்கொடையாளர்கள் தங்களுக்கு இருக்கும் சலுகைகளின்படி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதூ.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் போது திருமலைக்கு வரும் சாதாரண யாத்ரீகர்களுக்கு அதிக தங்குமிடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தில் நன்கொடையாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது.
ஸ்ரீவாரி சலகட்லா பிரம்மோத்ஸவம் 2024-ன் போது பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் திட்டங்களின் நன்கொடையாளர்களுக்கு தங்குமிடம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி துவஜாரோஹணம் மற்றும் அக்டோபர் 12-ம் தேதி சக்ர ஸ்நானம் ஆகிய நாட்களைத் தவிர, நன்கொடையாளர்கள் தங்களுக்கு இருக்கும் சலுகைகளின்படி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நன்கொடையாளர்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த அறிவிப்புக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்ரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“