மார்பக புற்றுநோயைப் பற்றி பல வதந்திகள் உள்ளன, அவற்றில் பல பிராக்களை மையமாகக் கொண்டுள்ளன.
இதுபோன்ற தவறான தகவல்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன.
பிரா தொடர்பான கட்டுக்கதைகளை பார்க்கலாம்.
1) பிரா அணியாதது மார்பகத்தை வேகமாக வளரச் செய்யும்
பிராக்கள் முற்றிலும் 100% தனிப்பட்ட தேர்வாகும். மேலும் இது மார்பக அளவைக் குறைப்பதில் அல்லது நிறுத்துவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதேபோல், மார்பகங்களில் கிரீம்கள், லோஷன்கள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்துவது அவற்றின் அளவை பாதிக்காது. பெரிய மார்பகங்களுக்கு ஒரே சாத்தியமான வழி எடை அதிகரிப்பது மற்றும் சிறிய மார்பகங்களுக்கு எடை குறைப்பதுதான்.
2) இறுக்கமான பிராக்கள் புற்றுநோயை உண்டாக்கும்
இறுக்கமான பிராக்கள் அணிவது சங்கடமாக இருக்கும் ஆனால் அவை புற்றுநோயை உண்டாக்காது. பெண்கள் தங்களின் வசதிக்கேற்ப பிராக்களை தேர்வு செய்யலாம்.
3) பிரா அணியாதது மார்பகத்தை வலுவிழக்கச் செய்யும்
முந்தைய கட்டுக்கதையைப் போலவே, மார்பகங்கள் தொங்குவதை பிராக்கள் தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்கள் மார்பகங்கள் தொய்வடைந்தால், பிராவால் அதைத் தடுக்க முடியாது.
4) அண்டர்வைர் பிராக்கள் (Underwire Bras) புற்றுநோயை உண்டாக்கும்
அண்டர்வைர் பிரா, சாதாரண பிரா அல்லது ஸ்போர்ட்ஸ் பிரா உட்பட எந்த வகையான ப்ராவையும் அணிவது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையது அல்ல.
இருப்பினும், கம்பி வெளியே குத்தத் தொடங்கும் போது அண்டர்வைர் ப்ரா அணிவது சங்கடமாக இருக்கும்.
5) பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும்
நீங்கள் தூங்கும் போது பிரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியலில் எந்த ஆதாரமும் இல்லை.
எனினும், பிரா அணிந்து தூங்குவது மார்பக அசைவைக் குறைக்கும், இது மார்பக வலியைக் குறைத்து மேலும் வசதியான தூக்கத்தை அனுமதிக்கும்.
6) கருப்பு நிற பிரா புற்றுநோயை உண்டாக்குமா?
கருப்ப மட்டுமின்றி எந்த வித வண்ணமும் புற்றுநோயை உண்டாக்காது. இதற்கு எவ்வித அறிவியல் உண்மையும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.