/indian-express-tamil/media/media_files/2025/10/13/download-47-2025-10-13-18-02-23.jpg)
உலகம் முழுவதும் பெண்களின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் 'நோ ப்ரா டே' அனுசரிக்கப்படுகிறது. இது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மார்பக அகற்றம் (mastectomy) செய்த பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு பன்முக நோக்குடனான நாள்.
நோ ப்ரா டே – நோக்கமும் அவசியமும்
மார்பகப் புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, ஒவ்வொரு 14 வினாடிக்கும், ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இந்தியாவில், இது ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒரு பெண்மணிக்கு. 2022, உலகம் முழுவதும் 6.7 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய வேதனையையும், விழிப்புணர்வினையும் உலகிற்கு நினைவூட்டும் வகையில் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
பிரதான நோக்கங்கள்:
- மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல்
- அறிகுறிகள், பரிசோதனைகள், மற்றும் ஆரம்ப கண்டறிதலின் அவசியம்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆதரவு
- ப்ரா அணியாமலிருப்பது குறித்து முன்னோடி பெண்களுக்கு ஒற்றுமை காட்டுதல்
ப்ரா அணிவதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பா?
பலரும் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என நம்புகின்றனர். ஆனால் ஆய்வின் படி, ப்ரா அணிவதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை. தோல் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவை மட்டும் ஏற்படலாம். எனவே, வலியுறுத்தப்படும் விஷயம் — சரியான அளவிலான, வசதியான ப்ரா தேர்வு.
முக்கிய சிந்தனைகள் – நோ ப்ரா டே யின் விழுப்புணர்வுகள்:
சுய பரிசோதனை அவசியம்:
மாதத்திற்கு ஒரு முறை மார்பகத்தை சுய பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
மருத்துவ பரிசோதனைகள்:
மாம்மோகிராம், அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்தில் புற்றுநோயைக் கண்டறிய முடியும்.
உளவியல் ஆதரவு:
மார்பகத்தை இழந்த பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல், அவர்களை ஊக்கப்படுத்துவதே நோ ப்ரா டே யின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
"நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" – மற்ற பெண்கள் ப்ரா அணியாமலிருப்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு ஒற்றுமையின் அடையாளமாகும்.
மார்பக புற்றுநோயின் காரணங்கள்:
- வயது, பாலினம்
- பரம்பரை காரணங்கள்
- உடல் பருமன்
- ஹார்மோன் மாற்றங்கள்
- மன அழுத்தம், வாழ்க்கை முறை
நாம் அனைவரும் — பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் — மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். தகவல் பரப்புங்கள், சோதனை செய்ய ஊக்குவிக்குங்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வுப்பூர்வ ஆதரவு அளியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.