உடலுக்கு நடைபயிற்சி சிறந்த ஒன்றாக உள்ளது. ஒவ்வொருவரும் தினந்தோறும் 10 ஆயிரம் அடி எடுத்து வைத்தால் உடல் இரும்பு மாதிரி வலிமையாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடைபயணம் நீரிழிவை தடுக்குமா? அதற்கான பதில் நேச்சர் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், ஒரு நாளைக்கு 8,600 படிகள் எடுப்பது எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அதிக எடை கொண்ட பெரியவர்கள் ஒரு நாளைக்கு 11,000 படிகள் நடந்து உடல் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகளை பாதியாகக் குறைக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக, ஆராய்ச்சியாளர்கள் நான்கு ஆண்டுகளாக 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மனச்சோர்வு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நிலைமைகளைத் தடுக்க நடைபயிற்சி உதவும் என்று பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீரிழிவு நோய் பாதிப்புக்கும் நடைபயணம் மருந்தாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக நீரிழிவு மருத்துவர் அனில் போராஸ்கர்( Anil Bhoraskar) கூறுகையில், ”நீங்கள் எதை உண்கிறீர்களோ அது சக்தியாக மாற்றப்பட்டு உடலால் பயன்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாறுகிறது. இளைஞர்களுக்கு 1,600 கலோரிகளும், இளம் குழந்தைகளுக்கு 2,000 கலோரிகளும் தேவைப்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து, "உடல் பருமன் என்பது இதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். நீங்கள் எதை உண்கிறீர்களோ அது சக்தியாக மாற்றப்பட்டு உடலால் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாறுகிறது. இளைஞர்களுக்கு 1,600 கலோரிகளும், இளம் குழந்தைகளுக்கு 2,000 கலோரிகளும் தேவைப்படுகின்றன” என்றார்.
மேலும் நடைபயிற்சியின் அவசியத்தை உணர்த்திய அவர், “ஒரு நாளைக்கு எத்தனை அடி செல்ல வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஆயிரம் அடிகள் வீதம் அதிகரியுங்கள். தினந்தோறும் குறைந்தது 10 ஆயிரம் அடியாவது எடுத்து வையுங்கள்” என்றார்.
மற்றொரு மருத்துவர் ஜெயின், “பிப்ரவரி 2013 இல் வெளியான நீரிழிவு தொடர்பான ஒரு ஆய்வில், தொடர்ச்சியான மிதமான நடைபயிற்சி, உடற்பயிற்சியை விட வகை 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியது என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil