தேங்காய் பலரின் வீடுகளிலும் சமையலுக்காக் பயன்படுத்துகின்றனர். தேங்காய் பால் எடுக்கும்போது, இந்த தேங்காயைத் துருவி, துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அரைப்ப்பதற்குள் சில நேரங்களில் கரண்ட் போய்விடும் அல்லது அந்த நேரம் பார்த்து மிக்ஸி பழுதடைந்துவிடும். அதனால், தேங்காய் பால் எடுக்க வேண்டும் என்ற முயற்சியைக் கைவிட்டு விடுவார்கள்.
அதனால், தேங்காய் பால் எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்காக, மிக்ஸியும் வேண்டாம், மின்சாரமும் வேண்டாம் அப்படியே தேங்காய் பால் எடுப்பது எப்படி என்ற ஒரு ஈஸியான வழியை உங்களுக்கு சொல்லித் தருகிறோம்.
முதலில் சமையலுக்கு தேங்காய் தேர்வு செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும். தேங்காய் பிரவுன் நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காயில் விரிசல் இருக்கக் கூடாது. வாங்கி வந்த தேங்காயை குடுமி மேல்நோக்கி இருக்கும்படி நிற்க வைத்து ஸ்டோர் செய்ய வேண்டும். இப்படி வைக்கும்போது, தேங்காய் கெடாமல் இருக்கும்.
அடுத்ததாக, மிக்ஸி இல்லாமல், மின்சாரம் இல்லாமல் தேங்காய் பால் எடுப்பது எப்படி என்று பார்ப்போம். அதற்கு, நல்ல தேங்காயைத் தேர்வு செய்து தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காயை உடைத்து முதலில் கண் பகுதி மூடியைப் பயன்படுத்துங்கள். உடைத்து உங்கள் வீட்டில் கேரட், பீட்ரூட் சீவுகிற கருவியில் தேங்காயைத் தூளாக சீவிக் கொள்ளுங்கள். பிறகு, அதை ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு, அதில் கை பொறுக்கக்கூடிய அளவுக்கு சுடு தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் அதிகம் சூடாக இருக்கக் கூடாது. பிறகு, அந்த தேங்காய் துருவலை அதில் போட்டு, ஒரு கரண்டியை வைத்து தொடர்ந்து நன்றாக அழுத்தி விடுங்கள். பிறகு, ஒரு 15 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் எடுத்து கரண்டியால் நன்றாக அழுத்தி விடுங்கள். இப்போது தேங்காய் பால் நன்றாக வந்திருக்கும் தூய்மையான ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தேங்காய் பாலைப் பிழிந்து பயன்படுத்துங்கள். மிக்ஸி இல்லாமல், மின்சாரம் இல்லாமல் தேங்காய் பால் எடுப்பது எவ்வளவு ஈஸி பாருங்கள், உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.