Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
லைஃப்ஸ்டைல்

ஃபிரிட்ஜ் தேவையில்லை… மல்லிகை பூவை இப்படி வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் வதங்காது!

மல்லிகை பூவை ஒரு மாதம் ஆனாலும் வாடி வதங்காமல் அப்படியே பிரஷ் ஆக வைத்திருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரஷ் ஃபீட் என்ற யூடியூப் சேனலில் கூறிய டிப்ஸ் பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Written by WebDesk

மல்லிகை பூவை ஒரு மாதம் ஆனாலும் வாடி வதங்காமல் அப்படியே பிரஷ் ஆக வைத்திருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரஷ் ஃபீட் என்ற யூடியூப் சேனலில் கூறிய டிப்ஸ் பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

author-image
WebDesk
24 May 2025 10:56 IST

Follow Us

New Update
Malligai

ஃபிரிட்ஜ் தேவையில்லை… மல்லிகை பூவை இப்படி வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் வதங்காது!

தினமும் சாமிக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பம் சுபீட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக சாமி படங்களை சுத்தம் செய்து அலங்கரித்து, வாசனை மிகுந்த மலர்களை சாற்றி வைப்போம். பூஜைக்கு உரிய பூக்களை முன்னரே வாங்கி வைப்பது சிலருடைய வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி வாங்கக்கூடிய பூக்களில் பெரும்பாலும் மல்லிகை இடம்பெறுகிறது. மல்லிகை பூவை ஒரு மாதம் ஆனாலும் வாடி வதங்காமல் அப்படியே பிரஷ் ஆக வைத்திருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரஷ் ஃபீட் என்ற யூடியூப் சேனலில் கூறிய டிப்ஸ் பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisment

மல்லிகை பூவை நீங்கள் கட்டிய பூவாக வாங்குவதை விட வாங்கி கட்டுவதுதான் நல்லது. அதிக முழமும் இதனால் நமக்கு கிடைக்கும். வாங்கும் போதே மொட்டாக வாங்கி விடுவது நல்லது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக வைத்திருக்க முடியும். அழகாய் கோர்த்த இந்த மல்லிகை பூவை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு பத்திரப்படுத்த ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்திற்குள் வாழை இலையை விரித்து வையுங்கள். இலையின் மீது இந்த பூவை வைத்து வாழை இலையின் காம்பு பகுதிகளை வெட்டி பூக்களை சுற்றிலும் போட்டுக் கொள்ளுங்கள். பூவின் மீதும் ஒரு சிறு வாழை இலையை போட்டு போ தெரியாதவாறு மூடி வைக்க வேண்டும். பின்பு பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விட்டால் 20 நாட்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழை இலை கிடைக்காதவர்கள் ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு மல்லிகை பூவை நன்கு சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதன் மீது ஒரு நியூஸ் பேப்பரை இதே போல சுற்றி எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 லிருந்து 15 நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

Advertisment
Advertisements

எல்லோரிடமும் பிரிட்ஜ் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரிட்ஜ் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? ஃப்ரிட்ஜ் இல்லாமல் வெளியிலேயே வைத்து பாதுகாக்க ஒரு சில்வர் பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது இதே போல வாழை இலையை விரித்து பூவை வைத்து அதன் மீது மெல்லிய துணிப்பை ஒன்றை நனைத்து மூடி வையுங்கள். தினமும் காலை, மாலை தண்ணீரை தெளித்து துணிப்பையை ஈரப்படுத்திக் கொண்டே இருந்தால் நீண்ட நாட்களுக்கு பிரஷ் ஆக பூ அப்படியே இருக்கும்.

வாழை இலை இல்லாதவர்கள் மெல்லிய துணிப்பை எடுத்து அதை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து இப்பொழுது மெல்லிய வெள்ளைநிற துணிப்பை பயன்படுத்துவது நல்லது. துணி பைக்குள் பூவை வைத்து லேசாக சுற்றிக் கொள்ளுங்கள். பின் இதை ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் தெளித்து வந்தால் போதும், 10 நாட்களுக்கு அப்படியே பிரஷ் ஆக பூ இருக்கும். வீட்டில் வெயில் படாத நிழலான பகுதியில் வைக்க வேண்டும்.

நன்றி: பிரஷ் ஃபீட்

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!