/indian-express-tamil/media/media_files/2025/06/10/kT8UdfVq5qDLVmJQ2R68.jpg)
ஃபிரிட்ஜ் வேண்டாம்; புதினாவை இப்படி வைத்தாலே போதும்… ஒரு வாரம் ஃப்ரஷ் ஆக இருக்கும்!
அனைவரும் சந்திக்கும் பொதுவான சமையலறைப் பிரச்னை, சந்தையில் இருந்து வாங்கி வரும் புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற நறுமணமிக்க மூலிகைகள், ஓரிரு நாட்களிலேயே வாடி, வதங்கி, அதன் மணத்தையும் குணத்தையும் இழந்துவிடுகின்றன. இதனால், பணமும் வீணாகிறது, தேவையான நேரத்தில் பயன்படுத்தவும் முடியாமல் போகிறது. இந்தச் சிக்கலுக்கு எளிய மற்றும் அற்புதமான தீர்வைக் கூறும் சத்யா சமையல் என்ற யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
புதிய நறுமணமிக்க மூலிகைகள் தங்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை இழக்கும்போது விரைவாக வாடிவிடுகின்றன. அதே சமயம், அதிகப்படியான ஈரப்பதம் இருந்தால் அவை அழுகிவிடவும் வாய்ப்புள்ளது. இந்த இரண்டிற்கும் சமநிலையான சூழலை உருவாக்குவதே அவற்றை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதன் ரகசியமாகும்.
டிப்ஸ்:
முதலில், வாங்கி வந்த புதினா கட்டுகளில் உள்ள பழுத்த, மஞ்சள் நிறமான அல்லது அழுகிய இலைகளை முழுமையாக நீக்கிவிட வேண்டும். இது மற்ற நல்ல இலைகளுக்கும் பாதிப்பு பரவுவதைத் தடுக்கும். அடுத்ததாக, டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய பருத்தித் துணியை எடுத்து, புதினா தண்டுப் பகுதியை மட்டும் நன்றாகச் சுற்றிக்கொள்ளுங்கள். வேர்ப்பகுதி இருந்தால் அதை அகற்றத் தேவையில்லை. இப்போது, டிஷ்யூ அல்லது துணியின் மீது லேசாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். இது தண்டுகளுக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தொடர்ந்து வழங்க உதவும். இலைகளின் மீது தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இறுதியாக, தண்ணீர் தெளிக்கப்பட்ட தண்டுகளுடன் கூடிய புதினாவை ஒரு கண்ணாடி டம்ளரில் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் நேராக நிற்குமாறு வைக்கவும். அவ்வளவுதான்.. இப்படி வைப்பதால், புதினாவை ஒரு வாரம் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.