பீட்ரூட், மாதுளையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தவறான கருத்து என்று உணவுத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
100 கிராம் பீட்ரூட்டில் 0.76 மில்லி கிராம் இரும்பு சத்தும், 100 கிராம் மாதுளையில் 0.31 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. இந்நிலையில் இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம் பாலிபினாஸ்தான். இதற்கும் இரும்பு சத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 10 மில்லி கிராம் இரும்பு சத்து தேவை, இந்த அளவை இந்த இரண்டும் பூர்த்தி செய்யாது என்று கூறப்படுகிறது. பீட்ரூட்டில் அதிக வைட்டமின் எ உள்ளது. மேலும் இதை நாம் அதிகமாக சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். இதில் உள்ள அதிக கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகக் கல் மற்றும் வயிறு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்நிலையில் நாம் சிறந்த அளவில் இரும்பு சத்து எதில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஏப்ரிகாட், பிளாக் கரண்ட், மஞ்சள் திராட்சை, புளி, சேனைக்கிழங்கு, பிரஞ்சு பீன்ஸ், அவரைக்காய், பச்சை பட்டாணி, பாகற்காய், முருங்கை இலை, வெந்தயக் கீரை, முட்டை, டோஃபூ ஆகியவற்றில் உள்ளது.
இதுபோல மாமிச வகையான சிக்கன், இளம் ஆட்டுகறி, சிப்பி ஆகியவற்றில் இரும்பு சத்து உள்ளது. இரும்பு சத்து உள்ள உணவை சாப்பிடும்போது வைட்டமின் சி அதிகம் உள்ள உணவான தக்காளி, சிட்ரஸ் பழங்கள், சிவப்பு, மஞ்சள் குடை மிளகாய் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது இரும்பு சத்தை உடல் எடுத்துகொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“