ஒவ்வொரு முறை சமையல் செய்துவிட்டு வந்தாலும் அடுப்பு அழுக்காகி எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கிறதா? அப்போ இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க.
எல்லோருமே அடுப்பு சுத்தம் செய்ய சோப்பு, உப்பு, பேக்கிங் சோடா என நிறைய பொருட்கள் தேவை அப்படி செய்தாலுமே அதில் உள்ள எண்ணெய் பிசுக்கும் அழுக்கும் போகவில்லை என்று சொல்வார்கள். ஆனால் இந்த முறையை பயன்படுத்தினால் எப்பொழுதுமே உங்கள் அடுப்பு புதிது போல பளிச்சென்று இருக்கும்.
இதற்கு வாழைப்பழ தோல் மட்டுமே போதும். இந்த வாழைப்பழ தோலை வைத்தே பழைய அடுப்பை புதுசு போல மாற்றி விடலாம். வாழைப்பழத்தோலை அடுப்பு முழுவதும் அழுக்கு இருக்கிற இடங்களில் நன்றாக தேய்த்து விட வேண்டும்.
அடுப்பை சுற்றி அழுக்கு இருக்கும் இடத்தில் வாழைப்பழ தோல் வைத்து நன்றாக தேய்த்து விட வேண்டும். அதே மாதிரி பர்னர் இருக்கும் இடத்திலும் தண்ணீர், லிக்யூட் எதுவுமே இல்லாமல் இந்த வாழைப்பழ தோலை வச்சு நல்லா தேய்க்கணும்.
துரு பிடிச்ச இடத்தில இந்த வாழைப்பழ தோல் வைத்து தேய்த்து எடுத்தாலே போதும் அடுப்பு பளபளன்னு இருக்கும். எல்லா பக்கமும் வாழைப்பழ தோல் வச்சி தேய்ச்சதுக்கு அப்புறம் ஒரு நல்ல ஈரத்துணியை வைத்து தொடச்சி எடுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“