இரவில் அடிக்கடி யூரின் போறீங்களா? இந்த பிரச்னை இருக்கானு பாருங்க; டாக்டர் பொற்கொடி எச்சரிக்கை

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? வைட்டமின் B1, மெக்னீசியம், வைட்டமின் D, மற்றும் ஜிங்க் குறைபாடுகள் எப்படி இந்தப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை டாக்டர். பொற்கொடி ஹரி விளக்குகிறார்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? வைட்டமின் B1, மெக்னீசியம், வைட்டமின் D, மற்றும் ஜிங்க் குறைபாடுகள் எப்படி இந்தப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை டாக்டர். பொற்கொடி ஹரி விளக்குகிறார்.

author-image
WebDesk
New Update
Nocturia frequent night urination

Nocturia frequent night urination causes and treatment Dr Porkodihari

இரவில் தூங்கும் போது இரண்டு, மூன்று ஏன் ஐந்து, ஆறு முறை கூட சிலர் சிறுநீர் கழிக்க எழுவார்கள். இதனால் அவர்களின் தூக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டு, காலையில் எழுந்ததும் மிகவும் சோர்வாகவும் தூக்கக் கலக்கத்துடனும் காணப்படுவார்கள். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த கட்டுரையில் டாக்டர். பொற்கொடி ஹரி சத்து குறைபாடுகள் மற்றும் பிற காரணங்களால் இது ஏற்படலாம் என்பதை விளக்குகிறார்.

Advertisment

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நாக்டூரியா பிரச்சனைக்கு சத்து குறைபாடுகளே முக்கிய காரணம். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது.

சிறுநீர்ப்பை ஒரு மெசஞ்சர் போல செயல்படுகிறது. உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாகவே அடிக்கடி சிறுநீரை உற்பத்தி செய்கிறது.  அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு உண்மையான காரணங்கள் நரம்பு சிக்னல்கள் பாதிப்படைவது, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, அதிக நீரேற்றம் (Overhydration), அல்லது சத்து குறைபாடுகள் (Nutritional Deficiencies) ஆகியவை தான்

Advertisment
Advertisements

நாக்டூரியாவுக்கு வழிவகுக்கும் முக்கிய சத்து குறைபாடுகள்

வைட்டமின் B1 (தியாமின்)

வைட்டமின் B1 நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. இது சிறுநீர்ப்பை தசைகளை கட்டுப்படுத்தி, மூளைக்கு சரியான சமிக்ஞைகளை அனுப்ப உதவுகிறது. வைட்டமின் B1 குறைபாடு ஏற்படும்போது:

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
சிறுநீர்ப்பை தசைகளின் கட்டுப்பாடு குறையும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

சூரியகாந்தி விதை, ஆளிவிதை, பிஸ்தா, முட்டை, மீன் வகைகள், ஈரல் வகைகள், பசலைக்கீரை போன்ற சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் B1 குறைபாட்டைத் தடுக்கலாம்.

மெக்னீசியம்

மெக்னீசியம் ஒரு மிக முக்கியமான கனிமச்சத்து. இது இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதுடன், சிறுநீர்ப்பை தசைகளை மென்மையாக்கி, அதிக நேரம் சிறுநீரைத் தேக்கி வைக்க உதவுகிறது. மேலும், அவசர உணர்வை ஏற்படுத்தும் நரம்பு சிக்னல்களை அமைதிப்படுத்தவும் மெக்னீசியம் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய வாழ்க்கை முறையில் 70% மக்கள் மெக்னீசியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சத்தான உணவுகளைத் தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods) மற்றும் துரித உணவுகளை (Junk foods) அதிகமாக உட்கொள்வது.

banana

மெக்னீசியத்தின் மற்றொரு முக்கிய பங்கு, ரத்த சர்க்கரை அளவையும், இன்சுலின் அளவையும் கட்டுக்குள் வைத்திருப்பது. மெக்னீசியம் குறைபாடு ஏற்படும்போது, ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சிறுநீர்ப்பை தசைகளின் கட்டுப்பாடு இல்லாமல் போகும், இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

பூசணி விதை, ஆளிவிதை, சியாவிதை, வாழைப்பழம், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் D

சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டில் வைட்டமின் D ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என்பது பலருக்குத் தெரியாது. வைட்டமின் D சிறுநீர்ப்பை தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது. வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டால், சிறுநீர்ப்பைக் கட்டுப்பாடு பலவீனமடையலாம் அல்லது மிகையாகச் செயல்படலாம் (overactive).

வைட்டமின் D இன் முக்கிய ஆதாரம் சூரிய ஒளிதான். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் அல்லது வீட்டிற்குள்ளேயே இருப்பவர்களுக்கு வைட்டமின் D குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கையாகவே வைட்டமின் D உற்பத்தியாக, தினமும் சிறிது நேரம் வெயிலில் இருப்பது அவசியம்.

mushroom

முட்டை, மீன், காளான் போன்ற உணவுகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் D குறைபாட்டைத் தவிர்க்கலாம்.

ஜிங்க் (Zinc)

ஆண்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணம் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் (Prostate Enlargement). ஜிங்க் (துத்தநாகம்) DHT மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஹார்மோன்கள்தான் புரோஸ்டேட்டின் அளவைப் பராமரிக்க உதவுகின்றன. மேலும், ஜிங்க் டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. ஜிங்க் குறைபாடு ஏற்படும்போது, ஆண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படலாம்.

பூசணி விதை, ஆளிவிதை, சியாவிதை, வால்நட் போன்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் ஜிங்க் குறைபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வேறு காரணங்களும் உண்டா?

இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் நாடக்டோரியாவுக்கு சில காரணங்களாக இருக்கலாம். ஆனால், இவை மட்டும்தான் காரணமா என்றால், நிச்சயமாக இல்லை. வேறு சில காரணங்களாலும் இரவு நேர அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், ஒரு மருத்துவரை அணுகி சரியான பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறுவது நல்லது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: