Advertisment

நூடுல்ஸ் வைத்து ருசியான சூப்; இப்படி செய்து பாருங்க

குளிர்காலத்திற்கு இதமாக சுவை, ருசியான நூடுல்ஸ் சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
immunity,boosting,soup,recipes, நோய்,சக்தி,சூப்,காய்கறி
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குளிர்காலத்திற்கு இதமாக சுவை, ருசியான நூடுல்ஸ் சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கோதுமை நூடுல்ஸ் - 1 கப் 

காய்கறிகள் - 1 கப் 

(கேரட், பீன்ஸ், கேப்ஸிகம், கோஸ், ஸ்வீட் கார்ன், பட்டாணி) என காய்கறிகளை கலவையாக எடுத்துக் கொள்ளலாம். 

மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

பட்டர்-1 ஸ்பூன்

சோள மாவு-1 ஸ்பூன் 

சோயா சாஸ்- சிறிதளவு  

வெங்காயம் – 1 

பூண்டு –1 பல் 

ஸ்ப்ரிங் ஆனியன் – 1/2 

மல்லித் தழை- சிறிதளவு 

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை நூடுல்ஸ் 1 கப் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் அதில் மிளகுத்தூள், வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் சோயாசாஸ் சேர்க்க வேண்டும். இப்போது மற்றொரு பாத்திரம் எடுத்து சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை சூப்பில் ஊற்றவும்.  சிறிது நேரம் கொதிக்க விட்டு எடுக்கவும்.  இறுதியாக மல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து பரிமாறினால் சுவையான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment