கோவை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஹோலி பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாடினர். கோவை வடகோவை பகுதியில் உள்ள தேவி அப்பார்ட்மெண்டில் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஹோலி பண்டிகை இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசிக் கொண்டு பண்டிகைகளை கொண்டாடினர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/14/holi-celebrates-covai-2-938904.jpeg)
இசைக்கு ஏற்ப நடனம் கையில் விளக்குடன் பெண்கள் வட்டமடித்து ஆடிய நடனம் காண்போரையும் கவர்ந்தது.
குஜராத்தை சேர்ந்த பெருவாரியான மக்கள் இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஹோலி பண்டிகையை கொண்டாடினர்..
/indian-express-tamil/media/media_files/2025/03/14/holi-celebrates-covai-1-202038.jpeg)
ஹோலி பண்டிகை இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் இருந்து பண்டிகையை கொண்டாடுவதற்காக பலர் வெளியூர் செல்ல உள்ள நிலையில் தனது வீட்டின் அருகில் இருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
பி.ரஹ்மான்