இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இனி நிம்மதியான உறக்கத்தை பெற வழிகள்

இரவில் குறிப்பிட்ட அளவு உறக்கம் மிகவும் முக்கியம். 6-8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

By: January 25, 2018, 3:42:22 PM

இரவில் குறிப்பிட்ட அளவு உறக்கம் மிகவும் முக்கியம். 6-8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு இன்றியமையாதது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், மாறிவரும் வாழ்வியல் முறைகளால் பலரும் இரவில் உறக்கமின்றி தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் இரவில் நிம்மதியான உறக்கத்தை பெறுவதற்கு சில வழிமுறைகள்:

1. குறட்டையை தடுக்கும் சாதனங்கள்:

குறட்டை மூலம் நமது உறக்கம் மட்டுமின்றி மற்றவர்களின் உறக்கமும் கெடும். குறட்டை உடல்நலக் கேட்டின் அறிகுறி என்றுதான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறட்டையை தடுக்கும் சாதனங்கள் இன்று மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. ரப்பர் வடிவில் நாக்கில் மாட்டிக்கொள்ளும் ஸ்டெபிலைசர், மூக்கினை சுத்தப்படுத்தும் சாதனங்கள் மூலம் குறட்டையை தடுக்கலாம். இதனால், நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.

2. நல்ல உறக்கத்தை தரும் மெத்தைகள்:

இந்தியாவில் தற்போது நல்ல உறக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மெத்தைகள் சந்தையில் அதிகளவில் புலங்குகின்றன. ஒருவரின் முதுகுவடத்தை சற்று உயர்த்தி, உடலை சீராக வைத்திருப்பதன் மூலம் தூக்கம் தடைபடுவது இந்த மெத்தைகள் மூலம் தடுக்கப்படுகின்றன.

3. தொண்டை ஸ்பிரேக்கள்:

புதினாவின் நறுமணத்துடன் கூடிய தொண்டை ஸ்பிரேக்களை உபயோகிப்பதன் மூலம், குறட்டையை உருவாக்கும் மென்மையான திசுக்களின் அதிர்வுகளை குறைத்து குறட்டையை தடுக்கும்.

4. ஒலி குறைப்பான்:

உறங்கும்போது நம் சுற்றுப்புறத்தில் ஏற்படக்கூடிய மெல்லிய ஒலியையும் குறைக்கும் சாதனங்கள் மூலம், தடைபடாத உறக்கத்தை பெற முடியும்.

இவை தவிர உறக்கத்தின்போது, அணிந்துகொள்ளக்கூடிய முகக்கவசம், ஹெர்பல் தலையணைகள் உள்ளிட்டவையும் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு உதவக்கூடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Not getting sound sleep try out some easy ways

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X