உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல… இப்படி செய்து பாருங்க முகம் பிரைட்டாக மாறும்!
பளபளப்பான, மிருதுவான சருமத்தைப் பெற ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிமையான பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
பளபளப்பான, மிருதுவான சருமத்தைப் பெற ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிமையான பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல… இப்படி செய்து பாருங்க முகம் பிரைட்டாக மாறும்!
சருமப் பராமரிப்பு என்பது இன்றைய நாட்களில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பளபளப்பான, மிருதுவான சருமத்தைப் பெற ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிமையான பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம். சிறந்த பலனைத் தரும் இந்த ஃபேஸ் பேக், உங்கள் சருமப் பராமரிப்புப் பட்டியலில் இடம்பிடிக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
இந்த ஃபேஸ் பேக்கைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அனைத்தும் நமது வீடுகளிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை. உருளைக்கிழங்கு ஒன்று (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்), காய்ச்சாத பால் ஒரு டம்ளர், 2 ஸ்பூன் பச்சரிசி மாவு, 2 ஸ்பூன் வெள்ளை உளுந்து.
நறுக்கிய உருளைக்கிழங்கு, காய்ச்சாத பால், பச்சரிசி மாவு, வெள்ளை உளுந்து ஆகிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைத்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொள்ளவும். அரைத்த இந்த பேஸ்ட்டை வடிகட்டி மூலம் வடிகட்டி, அந்த திரவத்தை ஒருமணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, ஃபிரிட்ஜில் வைத்த பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் மென்மையாகப் பூசவும். சில நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ் பேக்கின் முக்கியப் பலன்கள்:
சருமப் பொலிவு இது சருமத்தைப் பிரகாசமாக்கி, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும், முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்களைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவும். கரு வளையங்கள் மறையும், கண்களுக்குக் கீழ் உள்ள கரு வளையங்கள் மற்றும் உதட்டைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க உதவும். சரும நிற மேம்பாடு, கருமையான சரும நிறம் கொண்டவர்களுக்கு, இது சருமத்தின் நிறத்தை லேசாக மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.