/indian-express-tamil/media/media_files/l1rfcqkHehBEJOSdJscM.jpg)
நீங்கள் இனி துபாயில் 90 நாட்கள்வரை டூரிஸ்ட் விசாவில் பயணம் செய்யலாம். இந்நிலையில் 2 முதல் 3 நாட்களுக்கு உங்களுக்கு டூரிஸ்ட் விசா கிடைத்துவிடும். மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 11.9 மில்லியன் மக்கள் சுற்றிபார்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் சில விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் இந்த இடத்தில். அல் ஃபாஹிடியை நீங்கள் அதன் வரலாற்று சிறப்பம்சங்களுக்காக சென்று பார்க்கலாம்.
எமிரதி ஹெரிடேஜ் ( Emirati heritage): பாலைவன சபாரி, ஒட்டக்கத்தில் பயணம், அங்கே கிடைக்கும் உணவை சாப்பிடலாம்.
தீ துபாய் ஓப்ரா ஹவுஸ் என்ற இடத்தில் உள்ள கலைநயத்தை பார்க்கத் தவறாதீர்கள். தண்ணீர் மற்றும் துபாய் பவுண்டேஷனின் நடைபெறும் விளக்குகளின் காட்சியை பார்வையிடலாம். ஜமீல் ஆர்ட் செண்டரை பார்க்கலாம்.
ஹட்டா மலைப்பகுதியை பார்வையிடலாம். ஹட்டா கோட்டையை பார்க்கலாம். சிறிய அளவு போட்டிங் கடலில் செல்லலாம்.
புஜைரா டவுன் பகுதிகள், கோர்பக்கான் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். அல் பைதியா மசூதி, தண்ணீரில் குதித்தல் போன்ற விஷயங்களை செய்யலாம்.
அல் ஐன் ஒயாசிஸ் சென்று பார்க்காமல் இருக்க வேண்டாம். இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க கோட்டை உள்ளது. மஸ்கட், ஓமனின் தலைநகரத்திற்கு செல்ல மறக்காதீர்கள். பாலைவனத்தில் ஹாட் பலூன் ரைடு செல்ல மறக்க வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.