Advertisment

நீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்... இந்தத் திட்டத்தை தெரியுமா?

National Pension System Benefits: இந்த முறையின் கீழ் கணக்கு துவங்கியவர்களுக்கு, அவர்கள் 60 வயது அடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டுமா? அரசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

NPS Tamil News: தேசிய ஓய்வூதிய முறையின் அடிப்படை, நன்மைகள், தகுதிகள், பங்களிப்பு வரம்பு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது இங்கு தரப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் மட்டும்தான் பென்ஷன் வாங்க வேண்டுமா? மற்றவர்கள் கூடாதா? படியுங்கள் இந்தச் செய்தியை முழுத் தகவல்களுக்கு!

Advertisment

சம்பளம் வாங்குபவர்களுக்காக தேசிய ஓய்வூதிய முறை (National Pension System- NPS) 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

National Pension System Benefits: தேசிய ஓய்வூதிய முறை

உங்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதியை திரட்டுவதற்கு நீங்கள் தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணத்தை குறைந்த அளவில் பங்களிப்பு செய்யலாம். சம்பளம் வாங்குபவர்களுக்கு இருக்கின்ற வருங்கால வைப்பு நிதி திட்டம் போல சுய தொழில் செய்பவர்களுக்கு எந்த திட்டமும் இல்லாத காரணத்தால் இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

தேசிய ஓய்வூதிய முறை கணக்கை யார் துவக்க முடியும்?

இந்திய குடிமகன் மற்றும் இந்திய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இந்த கணக்கை துவக்கலாம். தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கணக்கு துவங்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக, அதிகப்பட்சம் 65 வயதுக்கு உள்ளானவராகவும் இருக்க வேண்டும். 60 வயதுக்குள் இந்த முறையின் கீழ் கணக்கு துவங்கியவர்களுக்கு, அவர்கள் 60 வயது அடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும்.

தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் பங்களிப்பு செலுத்துவதற்கான வரம்பு

பொது வருங்கால வைப்பு நிதியில் வருடத்துக்கு ரூபாய் 1.50 லட்சத்துக்கு மேல் டெப்பாசிட் செய்ய முடியாது. ஆனால் தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் இதுபோன்ற எந்த வரம்பும் இல்லை எனவே நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கில் பங்களிப்பு செய்யலாம்.

இந்த கணக்கை எங்கே துவங்க முடியும்?

தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக துவங்கலாம். ஆன்லைன் மூலமாக துவங்க NDSL வலைதளத்துக்கு சென்று துவங்க வேண்டும்.

தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆப்லைன் (offline) மூலமாக துவங்க அரசு நியமித்துள்ள நிறுவனங்கள் பின்வருமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், இந்திய தபால் துறை, Stock Holding Corporation, UTI Asset Management Company மற்றும் UTI Technology Services Limited ஆகியவை.

Joint holding and nomination

தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஒரு பெயரில் மட்டும்தான் துவங்க முடியும் ஆனால் நீங்கள் அதிகப்பட்சமாக மூன்று nominee களை உங்கள் கணக்குக்கு நியமிக்கலாம். மேலும் nominee களை நீங்கள் கணக்கு துவங்கும் போது நியமிக்க வேண்டும். nominee 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ அல்லது மைனராகவோ (minor) இருக்கலாம். மைனராக இருக்கும் பட்சத்தில் அவரது பாதுகாவலர் குறித்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட nominee களை நியமிக்கும் போது அவர்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை சதவிகித அடிப்படையில் குறிப்பிட வேண்டும்.

ஒருவர் வருங்கால வைப்பு கணக்கையும் தேதிய ஓய்வூதிய கணக்கையும் வைத்துக் கொள்ள முடியுமா ?

வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியாளர்களால் மட்டுமே சேர முடியும். ஆனால் தேதிய ஓய்வூதிய கணக்கை சம்பளம் வாங்குபவர் அல்லது சுய தொழில் செய்பவர் என யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர் இந்த இரண்டு கணக்குகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment