இந்த கோடைகாலத்தில் உங்கள் தாகத்தை தணிக்க, இந்த குளிர்ச்சியூட்டும் இயற்கையின் கொடையை ருசித்துப் பாருங்கள். இந்த நுங்குவில் உடல்நலனுக்கு நன்மை பயக்கும் பல பொருட்கள் உள்ளன.
பருவகால பழங்கள் ஒருவரின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் நன்மைபயப்பவை. உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுவதுடன், உடலில் இயற்கையான வெப்பத்தை நிலைபெறச் செய்கிறது. அதுபோன்ற ஒரு பழம்தான் நுங்கு. இது ஆங்கிலத்தில் palmyra palm என்று அழைக்கப்படுகிறது. ஐஸ் ஆப்பிள் என்றும் பலர் சொல்கின்றனர். இது உடலுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கோடை வெப்பத்தை தாக்குப்பிடிக்க இதை உண்ணலாம். பார்ப்பதற்கு லிச்சியைப் போல இருக்கும், சுவையில் இது இளநீர் போன்றதாகும். இயற்கையிலேயே குளிர்ச்சியான தன்மையைக் கொண்டிருக்கும். கசியும் பழமான இது சரியான தாதுப்பொருள் கலவை மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கிறது. இவை நம் உடலுக்கு அத்தியாவசியத் தேவைகளாகும்.
ஏன் இந்த பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்னும் நினைத்தீர்கள் என்றால், உங்கள் கவனத்துக்கு வராத சில பயன்களைப் பார்க்கலாம்.
குறைந்த கலோரி கொண்ட பழம். ஐஸ் ஆப்பிளான இது, கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் கால்சியத்துக்கு சக்தி ஊட்டுவதாக இருக்கிறது. இது குறைந்த அளவு நார்சத்து கொண்டது. இது விட்டமின் ஏ, சி, பி7, கே மற்றும் நமது உடலுக்கு அதிகமாக தேவைப்படும் இரும்பு சத்தையும் கொண்டிருக்கிறது.
நுங்குவில் தாதுப்பொருட்கள் உள்ளன. இதில் உள்ள சோடியம், பொட்டாசியம் ஆகியவை உடலில் நீர்சத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. தாகத்தை தணிக்கிறது. ஆவியாவதைத் தடுக்கிறது. கோடைகாலத்தில் இவையெல்லாம் முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக இருக்கலாம்.
ஜீரணக்கோளாறு, வாயுகோளாறு, அசிடிட்டி ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இயற்கையான மருந்தாக, நல்ல பயன்தரக்கூடியதாக இருக்கிறது. கர்ப்ப காலத்தின்போது அடிக்கடி ஏற்படும் குமட்டலை தடுக்கவும் இது பயன்படுகிறது.
ஐஸ் ஆப்பிளான இது, பல்வேறு வலுவான பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் விரைவில் மூப்பு அடைவதைத் தடுக்கிறது. தீர்க்கமுடியாத நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
இது உள்ளூரில் கிடைக்கும் பருவகால, எடையைக் குறைக்கும் வல்லமைபெற்றதாக அறியப்படுகிறது. நாள் முழுவதும் வயிற்றில் நிறைய தண்ணீரை தக்கவைத்துக்கொள்கிறது. தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.
ஐஸ் ஆப்பிளான இது, கோடையின் போது பொதுவாக ஏற்படும் அரிப்பு, வேர்குரு ஆகவற்றைத் தடுக்கும். ஐஸ் ஆப்பிளின் சதையைப் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், கோடைகாலத்தின் போது ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபடலாம்.
சீக்கிரம் கெட்டு விடும் என்பதால், ஐஸ்ஆப்பிளை ஒரு நாளுக்குள் உட்கொள்ள வேண்டியது நல்ல நடைமுறையாகும். அதே நேரத்தில் இதனை அளவுக்கு மீறி சாப்பிட்டால், வயிற்று வலி ஏற்படும்.
சாப்பிட்டுப் பாருங்கள், எப்படி இதனை விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil