சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு நுங்கு ஜூஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – அரை லிட்டர்
இளசான நுங்கு – 6
ஜவ்வரிசி – 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் – அரை கப்
ஏலத்தூள் – கால் தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை
நுங்கை தோல் நீக்கி கட் செய்து வைக்கவும். ஜவ்வரிசியை வேக வைத்து எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதில் வேக வைத்த ஜவ்வரிசி, சர்க்கரை, நுங்கு சேர்த்து கலந்து ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். சற்று சூடு ஆறியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ஜில்லுனு நுங்கு ஜூஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”