தோல் பிரச்சினைகள், தூக்கமின்மை, அஜீரணம் மற்றும் குறைந்த பாலுணர்வு ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்க ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி போதும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் ஜாதிக்காயின் குறிப்பிடத்தக்க நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.
ஜாதிக்காய் சருமத்திற்கு சிறந்த மூலிகைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கிறது. இது முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கரும்புள்ளிகளை அகற்றுவதற்கும் திறன் கொண்டது, என்று லீமா கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஷபானா பர்வீன் (clinical nutritionist, Artemis Hospital, Gurgaon), ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை முகப்பரு, சிவத்தல் அல்லது எரிச்சல் போன்ற தோல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
இது ஹார்மோன்களை சீராக்கவும், அதன் கார்மினேடிவ் (carminative) பண்புகளால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் மயக்க விளைவுகளைக் கொண்ட மிரிஸ்டிசின் (myristicin) போன்ற கலவைகள் காரணமாக தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும், என்றார்.
உணவியல் நிபுணர் பிரதிக்ஷா கடம் கூறுகையில், மாங்கனீசு, மக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு ஜாதிக்காய் ஒரு நல்ல மூலமாகும்.
இது நார்ச்சத்து நிறைந்தது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், டாக்டர் ஷபானா இந்த கூற்றுகளை ஆதரிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்று குறிப்பிட்டார், ஏனெனில் இந்த விளைவுகளை உறுதிப்படுத்த மனிதர்கள் மீது போதுமான ஆராய்ச்சி செய்யப்படவில்லை.
உங்கள் சருமத்திற்கு ஜாதிக்காயை எப்படி பயன்படுத்துவது?
தேவையான பொருட்கள்
1/2 டீஸ்பூன் ஜாதிக்காய்
1 டீஸ்பூன் தயிர்
1/2 தேக்கரண்டி தேன்
/indian-express-tamil/media/media_files/17wiJPNJ9PqCraqMQOgZ.jpg)
ஒரு கிண்ணத்தில் தயிர், தேன், ஜாதிக்காய் பொடி கலந்து அதை உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். மெதுவாக ஸ்கிரப் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கூடுதலாக, சிறந்த தூக்கத்திற்காக இரவு ஒரு கிளாஸ் பாலில் ஜாதிக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம் அல்லது ஜாதிக்காய் தேநீர் தயாரிக்கலாம் என்று லீமா பரிந்துரைத்தார்.
ஜாதிக்காயில் பல நன்மைகள் இருந்தாலும், அதிகளவில் உட்கொள்ளும் போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஷபானா கூறுகிறார். நச்சுத்தன்மை, ஒவ்வாமை எதிர்வினைகள், செரிமான பிரச்சனைகள் மற்றும் கர்ப்பக் கவலைகள் ஆகியவை இதில் அடங்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஜாதிக்காயில் எம்மெனாகோக் (emmenagogue) விளைவுகள் இருக்கலாம், இது கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டி கருச்சிதைவுக்கும் கூட வழிவகுக்கும். அதிகமாக உட்கொள்ளும் போது இது மனநல விளைவுகளை ஏற்படுத்தும், இது குழந்தைகளுக்கு குறிப்பாக தீங்கு விளைவிக்கும்.
ஜாதிக்காய் இரைப்பைக் குழாயையும் எரிச்சலடையச் செய்யும், எனவே செரிமான பிரச்சனைகள் அல்லது அல்சர் போன்ற நிலைமைகள் உள்ளவர்கள் இதை மிதமாக உட்கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும், என்று நிபுணர்கள் கூறினர்.
Read in English: Find out the 4-in-1-solution to improve skin, hormone health, digestion and sleep
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“